சூப்பர் ஸ்டார் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படங்கள்.!! இவர்களுடனா.

0

rajinikanth upcoming movies with these directors:தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அன்பாக அனைவராலும் அழைக்கப் படுபவர் நமது ரஜினிகாந்த். இவர் கடைசியாக முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் அண்ணாத்தா என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் இந்த திரைப்படத்தில் பல பிரபலங்கள் நடித்து கொண்டு வருகிறார்கள். இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ் போன்ற பலர் நடித்து வருகிறார்கள். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு பாதிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு துவங்க அரசு அனுமதி கொடுத்தவுடன் படப்பிடிப்பு துவங்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக சில படங்களில் நடிக்க உள்ளார். அந்த படங்களின் இயக்குனர் யார் என்பதை காணலாம்.

1. ராகவா லாரன்ஸ்  2.ஷங்கர்,  3. கேஎஸ் ரவிக்குமார் 4. ஏ ஆர் முருகதாஸ். போன்றோரின்  இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தெரியவருகிறது. இந்த தகவல் அனைத்தும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இவை எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளிவந்த தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.