தலைவர் 171 பர்ஸ்ட் லுக் போஸ்டர் லோகி இப்படி தான் வெளியிடுவாரா.? அப்போ அன்னைக்கு தான் ரஜினி ரசிகர்களுக்கு தீபாவளியே..

Thalaiver 171: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தலைவர் 171 படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்பது போல  உருவாக்கி போஸ்டர் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 171வது படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 171 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கடைசியாக ரஜனிகாந்த் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. எனவே ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை லியோ திரைப்படம் முந்துமா? என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இதனை எல்லாம் விட தற்பொழுது தலைவர் 171வது படம் உருவாகி வரும் நிலையில் இப்படம் கோலிவுட்டில் மாபெரும் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் ஜெயிலர் படம் கலவை விமர்சனத்தை பெற்றாலும் பாக்ஸ் ஆபீஸ் கல்லா கட்டியது அதன்படி தலைவர் 171-வது படத்தின் கதையே வேற லெவலில் இருக்கும் என கூறப்படுகிறது. எனவே கண்டிப்பாக தலைவர் 171 மாஸாக இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது.

thalaiver 171
thalaiver 171

மேலும் முக்கியமாக மாநகரம், கைதி, விக்ரம், லியோ போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமாகி இருக்கும் லோகேஷ் கனகராஜ் தான் தலைவர் 171 வது படத்தினை இயக்க உள்ளார். தலைவர் 171வது படம் எல்சியுவில் இணைந்தால் வேற லெவலில் இருக்கும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் தற்பொழுது ஏஐ தொழில்நுட்பத்தில் ரஜினிகாந்த் போல ஏகப்பட்ட போட்டோக்களை உருவாக்கப்பட்ட வருகிறது. அப்படி சமீபத்தில் அஜித் மற்றும் ரஜினிகாந்த் அஜர்பைஜானில் இருப்பது போல உருவாக்கப்பட்ட போஸ்டர்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆனதை அடுத்து தற்பொழுது பக்காவாக கேங்ஸ்டர் லுக்கில் ரஜினியின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.