இதுவரை இது போல் படத்தை நான் பார்த்ததே கிடையாது விடுதலைப் படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டிய ரஜினிகாந்த்.! வெளிவந்த புகைப்படங்கள் இதோ.!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக வெளிவந்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வரும் திரைப்படம் தான் விடுதலை வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் சூரி,விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளார்கள் மேலும் படத்திற்கு ஏற்ப இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை மிகவும் அற்புதமாக வந்துள்ளது.

இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு விடுதலை பட குழுவை பாராட்டாத பிரபலங்களே இல்லை என்ற அளவிற்கு சாதித்து விட்டது இதனை தொடர்ந்து பல பிரபலங்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் எதிர்பார்த்து வரும் விஷயம் விடுதலை இரண்டாம் பாகம் எப்பொழுது வெளிவரும் என கேட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் விடுதலை படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் கதாநாயகன் சூரி,இயக்குனர் வெற்றிமாறன் போன்ற முக்கிய பிரபலங்களை வாழ்த்தியுள்ளார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டு படம் மிகவும் அற்புதமாக வந்துள்ளது இரண்டாவது பாகம் பார்ப்பதற்கு நானும் ஆவலாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளாராம்.

மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த அனைத்து பிரபலங்களும் ரசிகர்களிடையே பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்கள் ஒரு சிறுகதையை மையமாக வைத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய இந்த திரைப்படத்திற்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.இந்நிலையில் ரஜினிகாந்த் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு பாராட்டியது படக்குழுவுக்கு இன்னும் சந்தோசம் அதிகமாகிவிட்டது.

மேலும் ரஜினிகாந்த் பாராட்டும் பொழுது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.ரஜினி நடிக்கும் ஜெயிலர்  திரைப்படத்தைப் பற்றியும் ரசிகர்கள் பல அப்டேட்களை கேட்டு வருகிறார்கள் ஜெயிலர் திரைப்படம் வெளிவந்தால் ரஜினி ரசிகர்கள் மிகவும் குஷியாகி விடுவார்கள். விரைவில் ஜெயிலர் திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.