நான் அரசர் என்றால் இவர் பேரரசர் என பிரபல நடிகரைப் புகழ்ந்த ரஜினிகாந்த்.! பின்னணி இதோ..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் நான் அரசர் என்றால் இவர் பேரரசர் என இவர் புகழாரம் சூட்டியுள்ள நிலையில் இது குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது கடந்த 207ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி அன்று ரஜினியின் சிவாஜி படம் வெளியான நாளில் அன்று அமிதாப்பச்சனின் ஜூம் பரார் ஜூம் என்ற படமும் வெளியானது. இந்த படங்கள் வெளியாக்குவதற்கு சில தினங்களுக்கு முன்பு வடமாநில ஆங்கில சேனல் ஒன்று இந்திய சினிமாவின் கிங் அமிதாப்பச்சனா இல்லை ரஜினியா என்ற ஒரு விவாத போட்டி ஒன்றை வைத்தது இதில் ரசிகர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

இந்தி பேசும் ரசிகர்கள் அதிகம் இருந்ததும் வாக்குகள் வித்தியாசத்தில் ரஜினியை இந்திய சினிமாவின் கிங்காக ரசிகர்கள் தேர்ந்தெடுத்தார்கள் எனவே இது குறித்து பல நாட்கள் கழித்து ரஜினியிடம் கேட்கும்பொழுது தனக்கே உரிய சிரிப்புடன் சினிமால நான் கிங்குனா அமிதாப் ஜி எம்பரர் என்றார் அதாவது இந்திய சினிமாவின் அரசன் நான் என்றால் அமிதாபச்சன் சக்கரவர்த்தி.

இது ரஜினிகாந்த் சும்மா ஒன்றும் கூறவில்லை அதாவது ரஜினிகாந்த் நடித்து வந்த காலகட்டத்தில் எது போன்ற திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என அமிதாப்பச்சனை பார்த்து தான் கற்றுக் கொண்டாராம். அந்த வகையில் அமிர்தாபட்சன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வெற்றினை பெற்று விட்டால் அது உடனடியாக ரஜினி நடிப்பில் தமிழில் ரீமேக் செய்யப்படுமாம்.

rajinikandh
rajinikandh

இவ்வாறு அமிதா ப்பச்சன் நடிப்பில் வெளிவந்த ஏராளமான திரைப்படங்களுக்கு ரஜினி, கமல் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்கள் தமிழ் ரீமேக்கில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமிதாப்பச்சனின் ரீமேக் திரைப்படங்கள் நடிப்பு அதுதான் இவருடைய நோக்கமாக இருக்குமாம்.

அந்த வகையில் ரஜினியின் நான் வாழ வைப்பேன் பில்லா, தில்லு முல்லு, படிக்காதவன், மாவீரன், மிஸ்டர் பாரத், வேலைக்காரன், தர்மத்தின் தலைவன், சிவா, பணக்காரன் உள்ளிட்ட படங்கள் அமிதாப்பச்சன் நடித்த இந்தி படங்களின் ரீமேக் ஆகும். தற்பொழுது அமிதாப்பச்சன் யாரும் தொட முடியாத அளவிற்கு சினிமாவில் வளர்ந்துள்ளார் இன்று அவருக்கு 80 பிறந்தநாள் என்பதால் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை கூறிய வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment