சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த திரைப்படம்.! இயக்குனர் இவர்தான் இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.

0
Rajinikanth
Rajinikanth

தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருபவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார்,இந்த  படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது இதனைத் தொடர்ந்து அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படத்தில் நடித்துவருகிறார் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் இவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.

தர்பார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினி யார் இயக்கத்தில் யார் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு ரசிகர்களிடம் இருந்து வந்தது, இந்த நிலையில் சன் பிக்சர் நிறுவனம் ரஜினியின் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டு ஒவ்வொரு ரசிகர்களும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தற்காலிகமாக இந்த திரைப்படத்திற்கு தலைவர் 168 என பெயர் வைத்துள்ளார்கள் இந்த திரைப்படத்தை விசுவாசம் புகழ் சிவா தான் இயக்கியிருக்கிறார், ஆனால் இதற்கு முன் சிவா ரஜினி அவர்கள் இல்லத்தில் சந்தித்ததாகவும் அதற்காக கதை கூறியதாகவும் வதந்திகள் பரவியது அது மட்டுமல்லாமல் அதன் புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர் நிறுவனம் ரஜினியின் அடுத்த படத்தின் அறிவிப்பை அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார்கள் இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். ரஜினி சிவா இணையம் இந்த திரைப்படத்திற்கு பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.