தனது ஆட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்களின் உற்சாகத்துடன் வைரலாகும் வீடியோ.!

0

பல வருடங்களாக சினிமா துறையில் பணியாற்றி வரும் நடிகர்களில் ஒரு முக்கியமான நடிகர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது திரைப்படங்களில் இவர் தனது ரசிகர்களுக்கு கருத்து சொல்லும் வகையில் பல திரைப்படங்களில் கூறியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரஜினி நடிப்பில் இறுதியாக வெளியான பேட்டை மற்றும் தர்பார் ஆகிய இரண்டு திரைப்படங்களும் வசூல் ரீதியாக நல்ல வசூலித்து சாதனை படைத்தது.

இதனையடுத்து ரஜினிகாந்த் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்தா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் முதலில் அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் போது  படக்குழுவினரை சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தற்காலிகமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து கடந்த மாதத்தில் மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு ஆரம்பித்தது அண்ணாத்த திரைப் படத்தில் ரஜினியுடன் இணைந்து மீனா,குஷ்பு, கீர்த்தி சுரேஷ்,நயன்தாரா,சூரி,பிரகாஷ் ராஜ் போன்ற சினிமா பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இதற்கிடையில் அண்ணாத்த படப்பிடிப்பு அடுத்த கட்டமாக ஹைதராபாத்தில் நடக்க உள்ளது இதற்காக ரஜினி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்றுள்ளார் மேலும் அப்போது அவர் காரில் வந்து விமான நிலையத்திற்கு செல்லும் பொழுது அவரது ரசிகர்கள் அவரை சுற்றி சூழ்ந்து விட்டார்கள்.

இதற்கிடையில் ரஜினி இறங்கி அவர்களுக்கு கை காட்டி நன்றி கூறிவிட்டு சென்றுள்ளார் அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காணொளி ஆனது தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இந்த வீடியோ காணொளியை இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.