7 படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்த ரஜினி.! வெளியாகிய சுவாரசிய தகவல்.!

சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வரும் நடிகர் தான் ரஜினிகாந்த் இவர் தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் வில்லன் கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்துள்ளார்.

பிறகு ஒரு தயாரிப்பாளர் இனிமேல் நீ வில்லனாக நடிக்க வேண்டாம் கதாநாயகனாக நடி அதுதான் உனக்கு ரொம்ப உதவியா இருக்கும் என்று கூறியுள்ளாராம்.அதற்கு ஏற்றது போல் நடிகர் ரஜினியும் கதாநாயகன் கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்துள்ளார்.

இப்படி தனக்கு உதவி செய்த தயாரிப்பாளருக்கு ரஜினி கிட்டத்தட்ட ஏழு திரைப்படங்கள் ஒரு ரூபாய் கூட காசு வாங்காமல் நடித்து கொடுத்துள்ளார் என ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் யார் அந்த தயாரிப்பாளர் யார் என்று கேட்டால் வேறு யாரும் இல்லை சான்றோர் சின்னப்பா தேவர் தானம் இவர் தான் ரஜினியை கதாநாயகனாக நடிக்க கூறினாராம்.

அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரஜினி தர்மத்தின் தலைவன்,பைரவி, தாயின் மீது சத்தியம்,அன்புக்கு நான் அடிமை,ரங்கா,தாய் வீடு,அன்னையோர் ஆலயம் போன்ற திரைப்படங்களுக்கு ரஜினி காசு வாங்காமல் நடித்து கொடுத்தாராம் அது மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் கடன் பிரச்சனையில் இருந்த பொழுதும் ரஜினி தான் உதவி செய்ததாக இந்த தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இதனை தொடர்ந்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் ரஜினி அடுத்ததாக நடித்து வரும் ஜெயிலர்  திரைப்படம் நல்ல வரவேற்பு பெற வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை என்றும் கூறி வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version