உச்ச நட்சத்திரமாக விளங்கி வந்த இரண்டு நடிகைகளை திருமணம் ஆவதற்கு முன்பு காதலித்த ரஜினிகாந்த்.! இரண்டு பேரும் வேற லெவல் தான்.

0

தமிழ் திரையுலகில் சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது கிசுகிசுக்கப்படும் நடிகர்களில் மிகவும் முக்கியமான நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த் இவர் சமீப காலமாக சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி பேசப்பட்டு வருகிறார் அண்மையில் அவர் உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்கா சென்று பின்பு குணமடைந்து வந்தார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.

ரஜினியின் திரைப்பயணத்தில் ஆரம்ப காலகட்டத்தில் இவரை பற்றி பத்திரிக்கையாளர்கள் அவரிடம் இருக்கும் கெட்ட பழக்கங்கள் மற்றும் நல்ல விஷயங்களை உடனே மக்களுக்குத் தெரியும் வகையில் செய்தி விட்டு விடுவார்கள் ஆனால் ரஜினி பற்றி தப்பு தப்பாக அப்பொழுது பலரும் கூறி வந்த நிலையில் பல சர்ச்சைகளில் ரஜினி சிக்கினார் என்பது குறிப்பிடதக்கது.

அவர் குடிப்பது,பீடா சாப்பிடுவது போன்ற விஷயங்களை பற்றி தான் அதிகமாக மக்கள் கேட்டு இருப்பார்கள் ஆனால் ரஜினி திருமணத்திற்கு முன்பே 2 நடிகைகளை காதலித்து உள்ளார் என ஒரு தகவல் தற்பொழுது சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது.

அதில் ரஜினி நடிகை ஸ்ரீதேவியை காதலித்து வந்ததாகவும் இருவரும் காதலித்து வந்த பொழுது எனது மகள் சினிமாவில் மிகப்பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என ஸ்ரீதேவியின் தாயார் இவர்களது காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக தகவல் கிடைத்துள்ளது ஆனால் ஸ்ரீதேவி அப்போது எந்த நடிகருடன் நடித்தாலும் உடனே காதலிக்கிறார் என கிசுகிசுக்கப்படுவார்.

அதேபோல் எம்ஜிஆர் மற்றும் பல சினிமா பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை தான் லதா இவரையும் ரஜினிகாந்த் காதலித்ததாக பத்திரிக்கைகளில் எழுதப்பட்டு மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது அதுமட்டுமல்லாமல் இவரது காதலைப் பற்றி எம்ஜிஆர் தெரிந்தவுடன் கோப பட்டதாகவும் பெங்களூர் சென்று இருவரும் ரகசிய திருமணம் செய்ய போகும் நேரத்தில் அந்த மாநில முதலமைச்சரிடம் பேசி இவர்களது காதலை பிரித்ததாகவும் எம்ஜிஆர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தது என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான்.

rajini6
rajini6

இந்த இரண்டு பெண்களையும் கடந்துதான் ரஜினி தன்னை பேட்டியெடுக்க வந்த லதா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார் என இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.