நியூ லுக்கில் அம்பானி வீட்டு விசேஷத்தில் கலந்துக்கொண்ட ரஜினிகாந்த்.! ‘நியூ லுக் செம தலைவா’ என புகைப்படங்களை பகிர்ந்த இளைய மகள் சௌந்தர்யா..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அம்பானி வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட நிலையில் அங்கு நியூ லுக்கில் இருக்கும் அவருடைய புகைப்படத்தை அவரது இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவு செய்ய அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு வயதானாலும் அந்த அழகு இன்னும் இவருக்கு கொஞ்சம் கூட குறையவில்லை என கூறி வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய நடிப்பில் சமீப காலங்களாக வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் கலவை விமர்சனத்தை பெற்று வருகிறது. எனவே தற்பொழுது இவர் வெற்றி திரைப்படத்தினை தர வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெய்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு இந்த படத்தினை தொடர்ந்து இவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.

அந்த வகையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் விரைவில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானியின் கலாச்சார நிகழ்ச்சி ஒன்று மும்பையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் அந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த தனது இளைய மகள் சௌந்தர்யாவுடன் கலந்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் நியூ லுக்கில் இருந்த புகைப்படங்களை சௌந்தர்யா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ‘நியூ லுக் செம தலைவா” என பதிவு செய்துள்ளார் எனவே அந்த புகைப்படங்களுக்கு தொடர்ந்து லைக்களும், கமெண்டுகளும் குவிந்து.

Leave a Comment

Exit mobile version