வீரப்பன் மீது உச்சகட்ட கோபத்தில் இருந்த ரஜினி.. எல்லாத்துக்கும் காரணமே அந்த நடிகர் தான்.. வெளிவரும் தகவல்

rajini-
rajini-

தமிழ் சினிமாவில் இன்று நம்பர் ஒன் ஹீரோவாக ஜொலிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். திரை உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தும் வரும் இவர் மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கம் அப்படியே கலந்து கொண்டாலும் சினிமாவைப் பற்றியும், தன்னைப் பற்றியும் குறைவாகத்தான் பேசுவார்..

ஏனென்றால் தான் பேசும்பொழுது எவரையும் புண்படுத்தக் கூடாது என்பதில் ரொம்பவும் தெளிவாக இருக்க கூடிய நடிகர்களில் ஒருவர் ரஜினி இப்படிப்பட்ட ரஜினி ஒரு பிரபலத்தை பற்றி மட்டும் தாக்கி பேசி உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. கன்னடத்தில் புனித ராஜ்குமார் நடித்த “அப்பு” திரைப்படம் 100 நாட்களைக் கடந்து மிகப்பெரிய வெற்றி கண்டது.

இந்த படத்தின் விழாவில் ரஜினி கலந்து கொண்டார் அப்பொழுது அவர் பேசும் போது..  சந்தன கடத்தல் வீரப்பனை பற்றி கடுமையாக தாக்கி பேசி உள்ளார் வீரப்பன் போன்ற ஒரு ராட்ஷசனை நான் பார்த்ததே இல்லை அவனை சூரசம் ஹாரம் செய்ய வேண்டும் என்றெல்லாம் பேசினார்.  அடி அவர் பேசுவதற்கு பின்னால் பல காரணங்களும் இருக்கிறது.

புனித் ராஜ்குமாரின் தந்தை தான் நடிகர் ராஜ்குமார் இவர் கன்னடத்தில் மிகப்பெரிய ஒரு டாப் நடிகராக இருந்தார்.  இவருடைய நடிப்பு திறமையை மற்றும் நல்ல குணங்களை பார்த்த ரஜினிக்கு ரொம்ப பிடித்து விட்டதாம் அவரைப் பற்றிய எந்த செய்திகள் வெளிய வந்தாலும் உடனே ரஜினி பார்த்து விடுவாராம் அப்படி ராஜ்குமார் மீது ரொம்பவும் பாசமாக இருந்துள்ளார்.

அப்படிப்பட்ட ராஜ்குமாரை வீரப்பன் ஒரு தடவை கடத்திக்கொண்டு போய்விட்டார் அந்த கோபத்தில் தான் ரஜினிகாந்த் வீரப்பனை கடுமையாக தாக்கி பேசி இருந்தார். வீரப்பன் இறந்த பொழுது கூட அன்றைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவை புகழ்ந்து பேசி இருந்தார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது அந்த அளவிற்கு வீரப்பன் மீது கோபத்தில் உள்ளார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

veerappan
veerappan