பாபா படத்தின் தோல்வியால் சோகத்தில் இருந்த ரஜினி.. எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றி பார்த்த பிரபல நடிகர்..!

0
rajini
rajini

தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் என்ற அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டு பல வருடங்களாக ஓடிக் கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தனது சினிமா பயணத்தை ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும்  தனி தத்துவமான ஸ்டைல் மற்றும் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்து ஓடி கொண்டிருக்கிறார்.

இப்பொழுது கூட தனது 169 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினி பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரல் ஆகிய வருகிறது. பிரபல இயக்குனர்  சுரேஷ் கிருஷ்ணா என்பவருடன் கைகோர்த்து ரஜினி நடித்த திரைப்படம் பாபா. இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் உருவானது. இந்த படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து  விஜயகுமார்..

மற்றும் நம்பியார், கவுண்டமணி, மனிஷா கொய்ராலா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சங்கவி போன்ற பலர் நடித்திருந்தனர். நீண்ட நாட்களுக்கு ரஜினி நடித்த படம் பாபா என்பதால் இந்த படத்தின் எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடக் கூடாது என படக்குழு கவனமாக இருந்தது.  ஒரு வழியாக சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் செய்தது

படம் வெளிவந்து எதிர்பார்த்த அளவுக்கு ஓடாமல் முதல் நாளே மண்ணை கவ்வியது.. இந்த படம் வினோஸ்தர்களுக்கு மிகப்பெரிய ஒரு ஏமாற்றத்தை தந்தது இதனால் ரஜினியின் வீட்டின் முன்பு பலர் போராட்டம் நடத்தி காசை வாங்கிக் கொண்டனர் இந்த படத்தால் ரஜினி இரண்டு நாட்கள் வெளியே வரவில்லையாம்..

அந்த சமயத்தில் பிரபல நடிகர் பாபா படத்தின் தோல்வியை கண்டு பார்ட்டி வைத்து கொண்டாடி உள்ளார் இந்த செய்தியும் ரஜினிகாந்துக்கு விழ அவர் ரொம்பவும் கஷ்டப்பட்டு போனாராம் இதனை சமீபத்திய பேட்டியில் பிரபல பத்திரிகையாளர் செய்யார் பாலு கூறியுள்ளார்.