“அண்ணாத்தா” படத்தை பேரப்பிள்ளைகளுடன் பார்த்த ரஜினி – இணைய தளத்தில் கலக்கும் புகைப்படம்.

rajini
rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த படம் ஒரு வழியாக வருகின்ற தீபாவளி அன்று வெளியாக உள்ளது. படத்தை படக்குழு ஏற்கனவே முடித்து விட்டதால் ரஜினியின் கெட்டப் மற்றும் பாடல்கள் ஆகியவற்றை வெளியிட்டு வந்த நிலையில் நேற்று இந்த படத்தின் ட்ரைய்லரையும் வெளியிட்டு உள்ளது.

இதுவரை இந்த ட்ரெய்லர் 5 மில்லியன் ஐயும் தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.  இதில் ரஜினியின் பஞ்ச் டயலாக் மற்றும் காட்சிகள் சிறப்பாக உள்ளதால் அந்த படத்தை தற்போது எதிர்நோக்கி கோடான கோடி மக்கள் இருக்கின்றனர்.  இந்த திரைப்படம் நிச்சயம் ஒரு பிளாக்பஸ்டர் படமாக அமையும் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

தற்போது அதற்கேற்றபடி திரையரங்குகளையும் தன் வசப்படுத்தியுள்ளது. இவர்கள் மட்டும் சுமார் 300 திரையரங்குகளை கைப்பற்றியுள்ளார்கள் என்பது  குறிப்பிடத்தக்கது. அதனால் முதல் நாளே மிகப்பெரிய அளவில் ஒரு வசூல் வேட்டை நடத்தும் என குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி அனைவரையும் கவர்ந்து உள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றியும் படத்தை பற்றியும் பல பிரபலங்கள் புகழ்ந்து பேசி வருகின்றனர் அதில் ஒருவராக தனுஷும் இந்த படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு என்னால் பொறுக்க முடியவில்லை வெகுவிரைவிலேயே படத்தை பார்க்க வேண்டும் என தோன்றுகிறது என பேசி இருந்தார்.

இப்படி இருக்கின்ற நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் இணைந்து படத்தை பார்த்துள்ளார். மேலும் படத்தை பார்த்து விட்டு அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் கசிந்துள்ளது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..