1001 ரூபாயை வாங்கிகிட்டு ஒரு மெகா ஹிட் படத்தை நடித்து கொடுத்த ரஜினி.! சூப்பர் ஸ்டார்ன்னா சும்மா சொல்லுறாங்க..

0

ஒரு நடிகருக்கு அவ்வளவு எளிதில் புனை பெயரை ரசிகர்கள் வைக்க மாட்டார்கள் அப்படி அவர்கள் பெயர் வைதீருகிறார்கள் என்றால் அவர் எந்த அளவிற்கு திறமையானவராக இருப்பார்கள்.

அப்படி தமிழ் சினிமாவில் பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொண்டு சிறப்பாக ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த இடத்திற்கு தகுதியானவர் என்பதை ஒவ்வொரு திரைப்படத்திலும் , நிஜ வாழ்க்கையிலும் வெளிக் காட்டிக் கொண்டுதான் வருகிறார்.

நடிப்பதை தமிழில் தொடங்கி பின் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம், ஆங்கிலம் என பல்வேறு தரப்பட்ட மொழிகளில் நடித்து வந்தவர் இவர் இதுவரை 160 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தோடு மட்டுமில்லாமல் இன்றளவும் பல படங்களை கையில் வைத்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 2007ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் சிவாஜி.

இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளிவந்து வந்து யாரும் எதிர்பாராத அளவிற்கு வசூல் வேட்டை நடத்தியது அதிக நாட்கள் ஓடிய படங்களில் இதுவும் ஒன்றாக தற்போதும் இருந்து வருகிறது.

இந்தப் படத்தை பிரமாண்ட பொருட்செலவில் ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது.

ஆனால் இந்த படத்திற்காக ஒப்பந்தம் செய்யும் போடும்பொழுது நடிகர் ரஜினிக்கும்,  இயக்குனர் ஷங்கருக்கும் வாங்கிய டோக்கன் அட்வான்ஸ் வெறும் 1000 ரூபாய் மட்டும் தானாம்.

ஏனென்றால் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனத்தின் கையில் முதலீட்டு தொகையை கையில் இல்லாததால் வங்கியிலிருந்து பணம் வர லேட்டாகும் என்பதால் அட்வான்ஸ் பணமாக பெரிய தொகையை கொடுக்காமல் ரஜினிக்கும் ஷங்கருக்கும் கையில் இருந்த அந்த ஆயிரத்து 1000 ரூபாயை கொடுத்து உள்ளனர்.

தயாரிப்பு நிறுவனத்துக்கு பின் மொத்த தொகையையும் கையில் வந்தபின் சூப்பர்ஸ்டாருக்கு கொடுக்கச் சென்ற பொழுது படத்தை முழுவதையும் எடுத்து முடித்து பின் வெற்றி கண்ட பிறகே பணத்தை கொடுத்தால் போதும் உங்கள் கையில் இருப்பது என் கையில் இருப்பது போன்று என கூறியுள்ளாராம் ரஜினி.

வெறும் 1000 ரூபாய்க்கு அட்வான்ஸ் பணத்தை பெற்று நடித்த ரஜினி இச்செய்தி தற்போது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது சூப்பர்ஸ்டார் நா சும்மாவா செம மாஸ்.

இச்செய்தியை படத்தின் தயாரிப்பாளர் சமிபத்திய பேட்டியில் குறிப்பிட்டார்.