கோடு போட்டுக்கொடுத்த ரஜினி அதில் ரோடு போட்டு கோடி கோடியாக சம்பாதிக்கும் விஜய்சேதுபதி.! அதற்கு காரணம் இதுதான்.!

தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்கு ஆறு திரைப்படங்களுக்கும் மேல் நடித்து சம்பாதித்து வருபவர் விஜய சேதுபதி இவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்து விட்டார் விஜய் சேதுபதி.

இந்த நிலையில் விஜய் சேதுபதி அதிக படங்களில் நடித்து சம்பாதிப்பதற்கு காரணம் ரஜினி போட்ட ஐடியாதான் என கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஹீரோவாக தமிழ் சினிமாவில் ஓரளவு பார்க்கக்கூடிய திரைப்படங்கலை கொடுத்து வருபவர் விஜய் சேதுபதி.

பலரும் நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என இருக்கும் இந்த நேரத்தில் வில்லன் கதாபாத்திரம் கொடுத்தாலும் அற்புதமாக நடிப்பேன் என நிரூபித்துக் காட்டியவர் விஜய் சேதுபதி. அதனால் இவருக்கு ஹீரோவை விட வில்லன் கதாபாத்திரம் மிகவும் கச்சிதமாக அமைந்து விட்டது என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

கடைசியாக விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து பவானியாக  உச்சத்திற்கே கொண்டு சென்றுவிட்டார். ஒரு சில நிமிட காட்சிகள் என்றாலும் விஜய்சேதுபதியை துணிந்து நடித்து வருவதால்தான் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

vijay sethupathi
vijay sethupathi

இந்த நிலையில் விஜய் சேதுபதி இப்படி ஓடி ஓடி உழைத்ததற்கு காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த ஐடியாதான் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது  ரஜினி அவர்கள் விஜய் சேதுபதியிடம் கூறியதாவது மார்க்கெட் இருக்கும் போது முடிந்தவரை நடித்து சம்பாதித்து சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள் என விஜய் சேதுபதிக்கு அட்வைஸ் கூறியுள்ளாராம் ரஜினி.

அதனால்தான் இப்படி ஓடி ஓடி உழைத்து வருகிறாராம் விஜய் சேதுபதி.  மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு விஜய் சேதுபதியை மிகவும் பிடிக்கும் என பேட்ட திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மேடையிலேயே கூறினார்.

மேலும் விஜய் சேதுபதி அடுத்ததாக யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார் லாபம் என பல திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் விஜய் சேதுபதியை ஹிந்தியில் வெப் சீரியஸ் ஒன்றில் நடித்து வருகிறாராம் அதுமட்டுமில்லாமல் மும்பை கார் என்ற திரைப்படத்திலும் விஜய்சேதுபதி நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் வில்லனாக பல திரைப்படங்களில் விஜய் சேதுபதியை கமிட் செய்து வருகிறார்களாம். இதனால் ரசிகர்கள் மீண்டும் வில்லனாக விஜய் சேதுபதியை காண ஆவலுடன் இருக்கிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment