அஜித்துக்காக எழுதப்பட்ட கதையில் நடிக்க ஆசைப்பட்ட ரஜினி.! முடியாது என மறுத்த இயக்குனர்.. படம் வெளிவந்து என்ன ஆனது தெரியுமா

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் தன்னை வளர்த்துக் கொண்டு வெற்றிகளை குவித்தவர் லிங்குசாமி. இவர் முதலில் “ஆனந்தம்” என்னும் குடும்ப படத்தை எடுத்து வெற்றி கண்டார் அடுத்து குடும்ப செண்டிமெண்ட் படத்தை தான் எடுப்பார் என பலரும் நினைத்தனர்.

ஆனால் மாதவனை வைத்து ரன் என்னும் ஆக்சன் படத்தை எடுத்து வெற்றி கண்டார். அதனைத் தொடர்ந்து நடிகர் விஷாலை வைத்து சண்டக்கோழி, கார்த்தி வைத்து பையா என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர் திடீரென மார்க்கெட் குறைந்து தற்போது படங்களை இயக்க முடியாமலும் தயாரிக்க முடியாமலும் அல்லாடி வருகிறார்.

இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது.. ரன் படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லிங்குசாமியை நேரில் அழைத்த பாட்டினாராம் மேலும் ரன் படத்தில் மாதவன் ஷட்டரை மூடி சண்டை போடும் காட்சிகள் சூப்பர் என கூறினாராம்..

பிறகு அடுத்து என்ன படம் பண்ண போகிறீர்கள் என ரஜினி கேட்க.. அஜித்தின் “ஜி” பட கதையை சொல்லி இருக்கிறார் இந்த கதையில் நான் நடிக்கலாமா என கேட்க அதற்கு ஹீரோ ஒரு கல்லூரி மாணவன் எனவே அது உங்களுக்கு செட்டாகாது என சொல்லி இருக்கிறார். மேலும் இந்த கதை ஒரு பேக்டரி என வைத்து கொள்வோம் அங்கே தேர்தல் நடக்கிறது.

அதில் நான் வெற்றி பெற்று அரசியலில் ஈடுபடுகிறேன் என வைத்துக் கொள்ளலாம் என அவர் கூற நான் மறுத்து விட்டேன் அண்ணாமலை போன்று அரசியலில் இல்லாத படம் பண்ணலாம் என்று என லிங்குசாமி ரஜினியிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டு இருந்தார். கடைசியாக அஜித், திரிஷா நடிப்பில் இந்த படம் வெளிவந்து படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment