ரஜினி, விஜயை தொடர்ந்து அஜித்துடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி.? இயக்குனர் யார் தெரியுமா.? வெளியான பரபரப்பு தகவல்.

ajith-and-vijaysethupathy
ajith-and-vijaysethupathy

ஹச். வினோத் சமீபகாலமாக சிறப்பான கதைகளை கொடுத்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் இவரது திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பு பெற்று வருகின்றன. தற்போது கூட இவர் அஜித்துடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து வலிமை என்ற திரைப்படத்தை எடுத்து கொடுத்துள்ளார்.

இந்த திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது இந்தப்படம் சூப்பர் ஹிட் அடிக்கும் பட்சத்தில் வினோத் மற்றும் அஜித்தின் மார்க்கெட் வேற லெவல் உயரம் என கணிக்கப்பட்டுள்ளது போதாத குறைக்கு வலிமை திரைப்படம் தமிழ் தாண்டி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்படுவதால் இவர்களது வெற்றி ஒரு அசுர வளர்ச்சியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் வினோத்  படம் எடுக்கும் விதம் அஜித்திற்கு மிகவும் பிடித்து உள்ளதால் தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கொடுக்க இருக்கிறாராம் அஜித்தின் அடுத்தப் படத்தையும் இவர்தான் இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது ஏற்கனவே அஜித்துடன் ஒரு புதிய கதையை கூறி ஓகே வாங்கி விட்டார்.

இப்படி இருக்கின்ற நிலையில் வினோத் அடுத்ததாக ஓரு புதிய கதையை ரெடி செய்து உள்ளதாக கூறப்படுகிறது. அந்தக் கதையை நடிகர் விஜய் சேதுபதியுடன் அவர் சொல்லி உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைவதா அல்லது அஜித்தின் 61வது திரைப்படத்திற்கு இவர் அஜித்துக்கு வில்லனாக நடிப்பதற்கு கதை கூறி உள்ளாரா என தெரியாமல் இருக்கிறது .

எது எப்படியோ விஜய் சேதுபதியும் வினோத்தும் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. குறிப்பாக அஜித் வினோத், விஜய் சேதுபதி மூன்று பேரும் இணைந்தால் அந்த திரைப்படம் நிச்சயம் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்திய அளவில் அந்த திரைப்படம் பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏற்கனவே விஜய் சேதுபதி விஜய் ரஜினி ஆகியோருடன் கை கோர்த்த நிலையில் அஜித்துடன் கைகோர்க்கும் வாய்ப்பு அதிகம் என கணிக்கப்பட்டுள்ளது.