ரஜினி விஜய் பட நடிகர் திடீர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்.!

சமீப காலமாக சினிமா உலகில் பல பிரபலங்கள் திடீர் திடீரென காலமாவது  சினிமா உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடித்து வந்த இரண்டு நடிகர்கள் அடுத்தடுத்து காலமானார்கள் அதனை தொடர்ந்து தற்பொழுது பிரபல இயக்குனரும் நடிகருமான டிபி கஜேந்திரன் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார்.

இயக்குனராக 1988 ஆம் ஆண்டு வீடு மனைவி மக்கள் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் அதனை தொடர்ந்து எங்க ஊரு காவல்காரன்  எங்க ஊரு மாப்பிள்ளை, பாண்டி நாட்டு தங்கம்,  தாயா தாரமா, நல்ல காலம் பொறந்தாச்சு, பாட்டு வாத்தியார், பட்ஜெட் பத்மநாபன் மிடில் கிளாஸ் மாதவன், பந்தா பரமசிவம் என பல திரைப்படங்களை இயக்கி தான் மூலம் சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தில் இருந்தவர் டிபி கஜேந்திரன்.

இவர் இயக்குனராக படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் படங்களிலும் நடித்துள்ளார் அந்த வகையில் இவர் 1985 ஆம் ஆண்டு புதிய சகாப்தம் என்ற திரைப்படத்தில் கஜேந்திரன் என்ற வேடத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் தான் இவருக்கு முதல் திரைப்படம். இதனைத் தொடர்ந்து பிரியமுடன் , பட்ஜெட் பத்மநாபன் மிடில் கிளாஸ் மாதவன் பம்மல் கே சம்பந்தம், பந்தா பரமசிவம் பிதாமகன் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ரஜினியுடன் சந்திரமுகி, விஜய் அவர்களுடன் வில்லு,  வேலாயுதம் என ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் இவர் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து பெயர் புகழ் பெற்றவர். தற்பொழுது 68 வயது ஆகும் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது அதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனால் திடீர்னு சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார் இந்த நிலையில் அவரது இல்லத்தில் உடலை வைத்து அவரது உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள் இதில் பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டார்கள் அது மட்டுமில்லாமல் மு க ஸ்டாலின் இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தினார் மேலும் நடிகர் செந்தில், கவுண்டமணி, ரமேஷ் கண்ணா ஆகியோர்கள் இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

பின்பு அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது..

tp gajenthiran
tp gajenthiran

Leave a Comment