சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்று வரை முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாக வலம் வருகிறார் இவர் சமீபத்தில் தான் தன்னுடைய 70வது பிறந்த நாளை கொண்டாடினார்.
இவரின் பிறந்த நாளைக்கு திரை பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்து கூறி வந்தார்கள் அதேபோல் பிரதமர் மோடி ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அங்குள்ள ரஜினிகாந்திற்கு வாழ்த்துக்கள் எனக் கூறினார் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன் எனவும் வாழ்த்தி இருந்தார்.
இந்த முறை ரஜினிகாந்த் அரசியல் வருவதை உறுதி செய்திருந்தார் அது மட்டுமில்லாமல் தனது பிறந்த நாளன்று இப்ப இல்லன்னா எப்பவும் இல்லை என்பதை குறிக்கும் வகையில் நௌ ஆர் நெவர் என எழுதப்பட்டிருந்த கேக்கை தனது குடும்பத்துடன் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.
இந்த நிலையில் தன்னுடைய இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் டுவிட்டரில் அந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார் அவருக்கு ரசிகர்கள் பலரும் லைக் போட்டு வந்தார்கள். மேலும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் தமது தந்தை முதலாவதாக வாங்கிய காருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
TMU5004 என்ற எண் கொண்ட அந்த காரை ரஜினி இன்று முதல் பராமரித்து வருவது இந்த புகைப்படத்தின் மூலம் தெரிய வந்துள்ளது தற்போது விலை உயர்ந்த சொகுசு கார்களை ரஜினி வைத்திருந்தாலும் முதலில் வாங்கிய கார் அவர் மனதிலிருந்து நீங்கவில்லை அதனால் அதை பராமரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னதான் புதுசா இருந்தாலும் பழசை மறக்காத ரஜினிதான்.