மகளை ஜெயிக்க வைக்க 28 வருடத்திற்கு பிறகு பாட்ஷா அவதாரம் எடுக்கும் ரஜினி.! இது என்னடா புது உருட்டா இருக்கு.!

அன்றிலிருந்து இன்று வரை தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த் இவர் தற்பொழுது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக சன் பிக்ச்சர் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் யோகி பாபு கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் நடிகர் ரம்யா கிருஷ்ணன் வசந்த் ரவி ரோபோ சங்கர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினி அவர்களின் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் என்ற திரைப்படத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம்தான் தயாரித்து வருகிறது.

கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர்கள் கதாநாயகனாக நடித்து வருகிறார்கள். மேலும் விஷ்ணு விஷால் தனுஷ் இயக்கும் புதிய திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே நாம் இணையதளத்தில் பார்த்து உள்ளோம். லால் சலாம் திரைப்படத்தில் மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

லால் சலாம் திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைக்க இருக்கிறார் மேலும் இந்த திரைப்படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் மிகவும் பிரமாண்டமாக தொடங்க இருக்கிறது இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது இந்த நிலையில்  இந்த திரைப்படத்தில் கேமியா ரோலில் நடிக்க இருக்கும் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து தகவல் தற்போது இணையதளத்தில் படும் வேகமாக வைரல் ஆகி வருகிறது.

லால் சலாம் திரைப்படத்தில் ரஜினி முஸ்லிம் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே ரஜினி பாட்ஷா திரைப்படத்தில் முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதற்குப் பிறகு அவர் எந்த ஒரு திரைப்படத்திலும் முஸ்லிம் வேடம் அமையவில்லை ஆனால் தற்பொழுது 28 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் லால் சலாம் திரைப்படத்திற்காக அவர் முஸ்லிம் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Leave a Comment

Exit mobile version