முத்து படத்தின் போது ஸ்டுண்ட் மாஸ்டர் கனல் கண்ணனை வச்சி செய்த ரஜினி.! சுவாரசியமான தகவல் இதோ.

தமிழ் திரை உலகில் ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகமாகி பின்னாட்களில் குணச்சித்திர கதாபாத்திரம் காமெடி மற்றும் வில்லன் போன்ற ரோல்களில் அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களுக்கு விருந்து படைத்தவர் ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணன்.

திரை உலகில் பல்வேறு தரப்பட்ட மொழி படங்களில் இவர் ஸ்டண்ட் பயிற்சியாளராக இருந்துள்ளார் அதுபோலவேதான் இவர் தமிழிலும் டாப் நடிகரான ரஜினி, அஜித், விஜய் போன்றவர்களுக்கு பயிற்சியாளராக இருந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் குறிப்பாக ரஜினியின் முக்கியமான ஒரு சில படங்களில் இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் காமெடி ரோலிலும் பின்னி பெடலெடுத்திருக்கிறார் அந்த வகையில் முத்து படத்தின் சூட்டிங் பாட்டில் ரஜினி ஒரு சீனில் அழுது கொண்டே வீட்டை விட்டு வெளியேறும் காட்சி பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது.

இதை சூட்டிங் ஸ்பாட்டில் பார்த்த கனல்கண்ணன் நீங்கள் சூப்பராக எடுத்துள்ளீர்கள் என்று கூறினார் அதற்கு ரஜினி உடனடியாக அப்போ நான் இதுவரையிலும் சரியாக நடிக்கவில்லை என்று செல்லமாக கூறினார். அதை கேட்டவுடன் ஷாக் ஆகி விட்டாராம் ஆனால் பின் ரஜினி செல்லமாக சொல்லியது அவருக்கு தெரிந்தது.

மேலும் அதன்பிறகு ரஜினியுடன் இணைந்து பல்வேறு படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர் ஆகவும் நடிகராகவும் பணியாற்றினார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment