சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு “ரஜினி” ஏன் தகுதியானவர் தெரியுமா.? 200 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள் மட்டுமே இத்தனையா.?

Rajini : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் உடன் கைகோர்த்து “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்துள்ளார் படம் வருகின்ற ஆகஸ்ட் 10 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இன்னும் குறைந்த நாட்களில் இருப்பதால் முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ரஜினி நடிப்பில் வெளியாகி 200 நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படங்கள் குறித்து தான் பார்க்க இருக்கிறோம்..

கபாலி : பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக நாட்கள் ஓடியது. குறிப்பாக மதுரையில் உள்ள மணி இம்பாலா திரையரங்கில் மட்டும் 275 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

சந்திரமுகி : ரஜினி விரல்விட்டு என்னும் அளவிற்கு தான் த்ரில்லர் படங்களில் நடித்துள்ளார் அதில் ஒன்று சந்திரமுகி 2005 ஆம் ஆண்டு பி வாசி இயக்கத்தில் வெளியானது படம் முழுக்க முழுக்க திரில்லர் ஆக்சன் காமெடி என அனைத்தும் கலந்த படமாக இருந்ததால் அனைத்து மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்றது 156 தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே 890 நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படம் இது மட்டும் தான்.

படையப்பா :  1999 ஆம் ஆண்டு ரஜினி, சிவாஜி, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பல முன்னணி நடிகரின் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் எமோஷனல் கலந்த படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது அதன் காரணமாக படம் 270 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அருணாச்சலம் : திரையுலகில் ஹீரோவாகும் இயக்குனராகம் ஓடிக்கொண்டிருப்பவர் சுந்தர் சி இவர் ரஜினி வைத்த 1997 ஆம் ஆண்டு எடுத்த இந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் படமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் படம் பிரபலமானது அதனால் பல்வேறு திரையரங்குகளில் 200 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டது.

தர்மதுரை – 211 நாட்கள் வெற்றி கரமாக ஓடியது. மனிதன் – 1987 ஆம் ஆண்டு வெளிவந்தது  200 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கொண்டது. படிக்காதவன் – திரைப்படம் 210 நாட்கள் ஓடியது. தங்க மகன் – திரைப்படம் 247 நாட்கள் ஓடியது. மூன்று முகம் – 225 நாட்களில் பில்லா – 260 நாட்கள். 16 வயதினிலே – 200 நாட்கள் ஓடி வெற்றி கண்டது.

Leave a Comment