ரஜினி சார் உங்க படத்துல நடிக்க மாட்டேன்.. நேருக்கு நேராக சொன்ன பிரகாஷ்ராஜ்.? எந்த படத்தில் தெரியுமா

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலம் பிரகாஷ்ராஜ் இவர் திரை உலகில் ஹீரோ வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் காமெடி என அனைத்து விதமான ரோலிலும் நடித்து பெயரையும் புகழையும் சம்பாதித்தவர் இப்பொழுதும் கூட வருடத்திற்கு மூன்று நான்கு படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை குறைய விடாமல் வைத்திருக்கிறார்.

கடைசியாக கூட இவர் விஜயின் வாரிசு படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்தார் தொடர்ந்து டாப் நடிகர்களுடன் நடித்து வந்தாலும் உச்ச நட்சத்திர நடிகர் ஆன ரஜினி கமல் ஆகியவர்களுடன் விரல் விட்டு எண்ணும் அளவிற்கு தான் படங்களில் நடித்துள்ளார் அந்த வகையில் கமலுடன் இணைந்து வசூல்ராஜா எம்பிபிஎஸ், வேட்டையாடு விளையாடு படங்களில் நடித்துள்ளார்.

ரஜினியுடன் இணைந்து படையப்பா அண்ணாத்த போன்ற படங்களில் நடித்துள்ளார். ரஜினி கமல் போன்ற நடிகரின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களிலேயே அவர் நடித்ததால் அதிக படங்களில் இவர்களுடன் நடிக்க முடியவில்லை அப்படித்தான் ரஜினியின் பாபா படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது அவரும் ஒப்புக்கொண்டு அட்வான்ஸ் வாங்கி ஒரு காட்சி கூட நடித்தார் பிறகு ரஜினி உங்களுடைய காட்சி குறைக்கப்பட்டுள்ளதாக கூறினார் அதற்கு பிரகாஷ்ராஜ் பரவாயில்லை எனக் கூறிவிட்டு பின் மேனேஜரை அழைத்து என்னுடைய காட்சி குறைக்கப்பட்டாலும் பரவாயில்லை..

ஆனால் முக்கியத்துவமான கதாபாத்திரமா என கேளுங்கள் என்று கூறியிருக்கிறார் பிரகாஷ்ராஜ்.. உதவி இயக்குனருடன் கேட்க அவரோ உங்களுடைய காட்சி குறைக்கப்பட்டு இருக்கிறது ஆனால் வெயிட்டான ரோல் தான் என தயங்கி தயங்கி சொல்லி உள்ளார் இதனை கேட்ட பிரகாஷ்ராஜ் நம்முடைய கதாபாத்திரம் முக்கியத்துவம் இல்லாத ஒரு கதாபாத்திரம் என்பதை புரிந்து கொண்டார் உடனே ரஜினி சாரை சந்தித்த பிரகாஷ்ராஜ் உங்களுடைய படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை..

ஆனால் முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியாது நான் விலகிக் கொள்கிறேன் என கூறி உள்ளார் உடனே ரஜினி நான் கொடுத்த அட்வைஸ் எனக்கு தர வேண்டாம் நீங்கள் எடுத்த முடிவு சரிதான் எனக்கூறி விட்டாராம்.. மேலும் நான் கொடுத்த அட்வான்சை திரும்பி தர வேண்டாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என தாராளமனசுடன் ரஜினி வந்துவிட்டார் என கூறப்படுகிறது

Leave a Comment