ஊடகம் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம் தமிழர்களால் தூள் தூளாகும்-சீமான் ஆவேசம்.!

0

2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை அரசியலில் அதிசயம் நிகழும் என ரஜினிகாந்த் கூறியதை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு தமிழக அரசியலில் மிகப் பெரிய அதிசயத்தையும் அற்புதத்தையும் மக்கள் 100% நிகழ்த்துவார்கள் என ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் மீடியா முன்பு தெரிவித்தார்.

இந்த நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சி சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.”ஆம்! அதிசயம் நிகழும். ‘தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும்’ என்கிற நினைப்பிலும்,மிதப்பிலும் செய்தி அரசியல் செய்து,அதீத ஊடகவெளிச்சம் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம் இனமானத்தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021யில் நடக்கும், நடந்தே தீரும்.”  இவ்வாறு கூறினார்.