2021 முடிவதற்குள் 200 கோடிக்கு பிளான் போட்ட ரஜினி.! தலைவர் உஷார் தான்.

0

நடிகர்கள் என்றால் பொதுவாக தங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு இருந்தால் போதும் வயதானாலும் கூட தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருவார்கள்.  அந்த வகையில் சில நடிகர்கள் மட்டுமே பல ஆண்டுகளாக தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து சினிமாவில் கலக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் ஒருவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவருக்கு வயது ஆனாலும் கூட அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து இளம் நடிகர்களுக்கு கூட டப் கொடுத்து வருகிறார். இவர் இளமையில் காலத்தில் எப்படி சுறுசுறுப்பாக நடித்தாரோ அதே அளவிற்கு கொஞ்சம் கூட சுறுசுறுப்பு குறையாமல்  தற்போது வரையிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்பொழுது இவர் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் தங்கையாக கீர்த்தி சுரேஷ்,ரஜினிகாந்த்க்கும் முறை பெண்களாக குஷ்பூ மற்றும் மீனா போன்ற நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் இத்திரைப்படம் இன்னும் சில மாதங்களில் முடிய வேண்டும் என்பதற்காக மிகவும் விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் படக்காட்சிகள் பிடிக்கப்பட்டு வருகிறது. இத்திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ்  நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் தான் ரஜினிகாந்த் செம பிளான் ஒன்றை போட்டுள்ளார். அதாவது  பொதுவாக ரஜினிகாந்த் படிப்பில்  வருடத்திற்கு இரண்டு திரைப்படங்களாவது வெளியாகிவிடும். எனவே இந்த வருடத்தில் இருக்கும் இன்னும் 6 மாத காலத்தில் இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்து விட வேண்டும் என்று முடிவு செய்துள்ளாராம்.

தற்பொழுது கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் இது சாத்தியமா கொஞ்சம் டவுட் தான். இந்நிலையில் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

ஆனால் இயக்குனர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி அல்லது கார்த்திக் சுப்புராஜ் இந்த இரண்டு இயக்குனர்களில் ஒரு இயக்குனர் ரஜினியின் அடுத்த திரைப்படத்தை இயக்க உள்ளார்.

இந்நிலையில் தான் ரஜினிகாந்த் எப்படியாவது இரண்டு திரைப்படங்களில் நடித்து விட வேண்டும் என்று முடிவு செய்துள்ளாராம். ஏனென்றால் தனது உடல் நலம் பாதிப்பு ஏற்படுவதற்கு ஓரளவிற்கு பணம் சம்பாதித்து விடவேண்டும் என்று முடிவு எடுத்துள்ளார் போல. தற்போது இவர் நடிக்கும் திரைப்படங்களில் 100 கோடி சம்பளம் வாங்குகிறார்.

இதன் காரணமாகத் தான் தன்னால் முடிந்தவரை விரைவில் பல படங்களில் நடித்து விட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார். அந்த வகையில் இன்னும் 6 மாத காலத்தில் இரண்டு திரைப்படங்களில் நடித்து 200 கோடி சம்பாதித்து விடலாம் என்று எண்ணி உள்ளார்.