ரஜினியின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் 25 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படையப்பா இன்று மீண்டும் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இதன் ட்ரெய்லர் கூட சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
அதை தொடர்ந்து தமிழ்நாட்டில் மட்டுமே இப்படம் 300 தியேட்டர்களில் இன்று திரையிடப்பட்டுள்ளது. அத்தனை தியேட்டர்களும் ஹவுஸ்புல் என்பதும் கூடுதல் தகவல். தலைவரின் ரசிகர்கள் குடும்பத்தோடும் வந்து தியேட்டரில் படத்தை பார்த்து கொண்டாடிய நிகழ்வுகளும் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் படையப்பா ரீ ரிலீஸ் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் படத்தின் கலெக்ஷன் பற்றிய தகவலும் வெளிவந்துள்ளது.
அதாவது டிக்கெட் புக்கிங் ஏற்கனவே சாதனை படைத்த நிலையில் படையப்பா 10 கோடி வசூல் செய்யும் என்கின்றனர் சினிமா விமர்சகர்கள். இவ்வளவு பணத்தையும் சூப்பர் ஸ்டார் அப்படியே தன்னுடைய அறக்கட்டளைக்கு அனுப்ப சொல்லிவிட்டாராம்.
இதன் மூலம் அவருடைய ரசிகர்கள் யாருக்கெல்லாம் என்னென்ன உதவி தேவைப்படுகிறதோ அதை எல்லாம் செய்யலாம் என்ற முடிவில் அவர் இருக்கிறாராம். ஏனென்றால் ஏ எல் தேனப்பன் பணம் சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் செய்தாலும் கூட அவர் ஒரு இணை தயாரிப்பாளர் தான்.
உண்மையில் ரஜினி தான் தயாரிப்பாளர். அதனால் லாப நஷ்ட கணக்கு அனைத்தும் அவரை தான் சேரும். அதனாலேயே ரீ ரிலீஸ் வசூலை தன்னுடைய அறக்கட்டளையின் மூலம் மக்களுக்கு உதவ அவர் முடிவு செய்து இருக்கிறார்.