பொதுவாக சினிமாவில் ஒரு நடிகை ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்து விடுவார்கள் ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அவர்கள் சினிமாவை விட்டு காணாமல் போய்விடுவார்கள். அந்த வகையில் 90 காலகட்டத்தில் நடித்த நடிகைகள் சிலர் என்ன ஆனார்கள் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியாமல் போகிறது.
அப்படித்தான் மெகா ஹிட்டான ஜென்டில்மேன் மற்றும் முத்து திரைப்படத்தில் நடித்த சுபஸ்ரீ என்ன ஆனார் என்பது இதுவரை தெரியவில்லை. பொதுவாக சினிமாவில் பிரமாண்டம் என்று யாராவது கூறினால் அவர்கள் நினைவிற்கு வருவது முதன்முதலில் இயக்குனர் ஷங்கர்தான் ஏனென்றால் வித்தியாசமான கதை களத்தை பிரம்மாண்டமாக எடுப்பதில் வல்லவர். இவர் இயக்கத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் வெற்றி அடைந்துள்ளன.
அதேபோல் இவரின் திரைப்படங்கள் அனைத்தும் பிரமிக்கவைக்கும் அந்த அளவு மிக பிரம்மாண்டமாக எடுப்பார் திரைப்படத்தை. இந்நிலையில் சங்கர் திரைப்படத்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இயக்குனர் சங்கர் முதன் முதலில் ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் அர்ஜுன், மதுபாலா, நம்பியார், மனோரமா, கவுண்டமணி, செந்தில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தார்கள்.
இந்த திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்தவர் தான் சுபஸ்ரீ இவர் ஜென்டில்மேன் திரைப்படத்திற்கு முன்பே பிரசாந்த் நடிப்பில் வெளியான எங்க தம்பி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். என்னாதான் ஜென்டில்மேன் திரைப்படத்திற்கு முன்பு நடித்திருந்தாலும் ஜென்டில்மேன் திரைப்படம் தான் இவருக்கு பெரும் புகழையும் பெற்றுக் கொடுத்தது.
சுபஸ்ரீ ஜென்டில்மேன் திரைப்படத்திற்கு பிறகு முத்து, ஆறுச்சாமி, மைனர் மாப்பிள்ளை என ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே நடித்திருந்தார் அதன்பிறகு தெலுங்கு, கன்னடம் என வேறு மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். இந்த நிலையில் 1997 ஆம் ஆண்டுக்குப் பிறகு சுபஸ்ரீ எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்காமல் விலகி இருந்தார்.
இந்த நிலையில் சுபஸ்ரீயின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் சுபஸ்ரீ தன்னுடைய சகோதரி மற்றும் குடும்பத்துடன் இருக்கிறார். அந்த புகைப்படத்தில் உடல் எடை அதிகரித்து ஆன்ட்டி போல் தோற்றமளிக்கிறார்.
இதொ அந்த புகைப்படம்.
