ரஜினி பட ரீமேக் – முன்னணி நடிகருடன் நடிக்க மறுத்த தமன்னா,நயன்தாரா,அனுஷ்கா.?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் 1992ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மன்னன் இத்திரைப்படத்தை பி வாசு அவர்கள் இயக்கியிருந்தார். இப்படத்தில் ரஜினியுடன் குஷ்பு, விஜயசாந்தி ,மனோரம்மா, பண்டரிபாய் ,கவுண்டமணி, விசு போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர் இப்படம் திரையரங்கில் வெளிவந்து நல்லதொரு வசூல் சாதனை படைத்தது அதுமட்டுமல்லாமல் மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது.

இப்படம் தற்பொழுது டிவி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டால் கூட அதிக பேர் பார்கின்றனர் அந்த அளவுக்கு மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு தற்போது வரை பிடித்துப்போன படமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் அல்லது ரீமேக் உரிமம் வாங்குவதற்காக சினிமா பிரபலங்கள் பலர் போட்டி போட்டு வருகின்றனர். அதிலும் ரஜினியால் வளர்ந்து ரஜினி போல உயர்ந்த ராகவா லாரன்ஸ் இப்படத்தில் நடிக்க அவருக்கு மிக ஆர்வம் இதனை இயக்குனர் பி வாசுவிடம் சொல்லி இப்படத்தின் ரீமேக்கை நீங்க பண்ணின என் கால்ஷீட் எப்பவும் வேண்டுமானாலும் உண்டு என கூறியுள்ளார். இதனையடுத்து இயக்குனர் வாசு அவர்கள் இதுகுறித்து வேலையை தொடங்க ஆரம்பித்தார் ஆனால் இப்படத்தின் ஒரிஜினல் தயாரிப்பு நிறுவனமான சிவாஜி பிரமோஷன் அதற்கு முட்டுக்கட்டை போட்டது.

நாங்களே விக்ரம் பிரபுவை வைத்து பண்ணலாம்னு இருக்கும் என்று கூறிவிட்டார்கள் அப்புறம் என்ன நினைச்சங்க தெரியல மீண்டும் அப்படத்தின் ரீமேக் விஷயத்தில் வேறு ஒரு முடிவை எடுத்துவிட்ட சிவாஜி ப்ரொடக்ஷன் லாரன்ஸுக்கு இருக்கிற வியாபாரத்தை ஏன் விட்டுக் கொடுக்கணும் வாசு இயக்கத்தில் ஆரம்பிக்கலாம் என நினைத்து வேலையை தொடங்கிய நிலையில் அதற்கும் ஒரு அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக ஒரு செய்தி ஒன்று அண்மையில் வெளிவந்து படக்குழுவினரை அதிர்ச்சி கொடுத்தது. தமன்னா ,அனுஷ்கா, நயன்தாரா ஆகிய மூவருமே சொல்லி வைத்த மாதிரி ராகவாலாரன்ஸிவுடன்நடிக்க மறுத்து விட்டனர்.

manan
manan

என்ன காரணம் என்று தெரியவில்லை ஆனால் முன்று பெரும் சில காரணங்களைச் சொல்லி மறுத்து விட்டார்கள் இதனால் விஜயசாந்தி கேரக்டருக்கு ஏற்ற நடிகை கிடைக்காததால் என்ன செய்வது என்று தெரியாமல் பி வாசு அவர்கள் சுற்றி திரிந்த வருகிறார். இக்கதைக்கு இவர்களை விட வேறு யாரும் சிறந்தவராக இருக்க மாட்டார்கள் என்பதால் மூன்று நடிகைகளுடன் திரும்பவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார் பி. வாசு.

Leave a Comment