எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் ரஜினி அஜித் சந்திப்பு.! குழப்பத்தில் ரசிகர்கள்

0
ajith-rajini
ajith-rajini

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது நடிகர் ரஜினியை சந்திக்க போவதாக ஒரு தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே நடிகர் அஜித்தை நேரில் சென்று சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த புகைப்படம் சற்று முன் வெளியாகிய இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் திரையு உலகில் மாஸ் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த வரும் நடிகர் அஜித் உடன் ரசிகர்கள் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கலே இணையதளங்களில் தலைப்புச் செய்தியாக உலா வருகிறது.

இந்த நிலையில் நடிகர் அஜித்தை சமீபத்தில் சந்தித்ததாகவும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.

இதனை தொடர்ந்து நடிகர் அஜித் அவர்கள் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த்தை தற்போது நேரில் சென்று சந்திக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.  நடிகர் ரஜினி தற்போது நெல்சன் இயக்கம் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் சென்னையில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது.

அதே இடத்தில் நடிகர் அஜித் நடித்துவரும் துணிவு படத்தின் பாடல் காட்சிகள் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஒரே ஸ்டூடியோவில் அடுத்தடுத்த செட்டுகளில் ரஜினிகாந்த் மற்றும் அஜித் படங்கள் படப்பிடிப்பு நடைபெற்று வருவதால் அஜித் மற்றும் ரஜினி ஆகிய இருவரும் படப்பிடிப்பு தளத்தில்  சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அஜித்தும் ரஜினிகாந்த்தும்  சந்தித்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி வைரல் ஆகியது ஆனால் இந்த புகைப்படம் குறித்து அஜித்தின் மேனேஜர் விளக்கம் அளித்த போது அந்த புகைப்படம் போட்டோ ஷாப் செய்யப்பட்டது என்று உண்மை வெளியானது அது மட்டுமல்லாமல் ரஜினி அஜித் சந்திப்பு நடைபெறவில்லை என்று அந்த வதந்திக்கு முடிவு கட்டினார்.

ஆனால் இந்த முறை அஜித், ரஜினி சந்திப்பு கூடிய விரைவில் நடக்கும் எனவும் அப்படி நடந்தால் அந்த சந்திப்பின் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியானால் என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.