திரையுலகில் பல வெற்றி படங்களை சூப்பர் ஸ்டார் கொடுத்திருந்தாலும் கடைசியாக நடித்த ஒரு சில படங்கள் தோல்வி படங்களாக மாறின. படம் சுமாராக இருந்தாலும் விமர்சகர்கள் மோசமாக பேசி அந்த படத்தின் வசூலுக்கு பாதிப்பை ஏற்படுத்தினர். இதனால் அப்படிதான் ரஜினியின் சில படங்களை ப்ளூ சட்டை மாறன் மிகவும் மோசமாக விமர்சித்தார்.
இதனால் ரஜினி அவர் மீது கோபத்தில் இருந்ததாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் இந்த விமர்சகர்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்க நெல்சன் உடன் கைகோர்த்து ஜெயிலர் படத்தில் நடித்தார் படம் சிறப்பாக வந்ததை உணர்ந்து கொண்ட ரஜினி படம் வெளி வருவதற்கு முன்பாகவே செய்யாறு பாலுவின் மூலம் ப்ளூ சட்டை மாறனை வரவழைத்துள்ளார்.
ஆனால் ப்ளூ சட்டை மாறன் நான் வரமாட்டேன் என கூறி மறுத்திருக்கிறார் செய்யாறு பாலு ரஜினி மிகவும் நல்லவர் அவர் மன்னிக்கும் குணம் உடையவர் எனக் கூறி எப்படியோ ப்ளூ சட்டை மாறன் வர ஒப்புதல் வாங்க வைத்து விட்டார் ஆனால் ப்ளூ சட்டை மாறன் ஒரு கண்டிஷன் இருக்கிறது அங்கு நடக்கின்ற சந்திப்பை போனில் வீடியோ எடுப்பேன் அதற்கு சம்மதம் கொடுங்கள் என கேட்டுள்ளார்.
ஓகே எடுத்துக் கொள்ளலாம் ஆனால் வெளியே விடக்கூடாது என கையெழுத்து வாங்கிக் கொண்டனர் ரஜினி தரப்பினர் பின்னர் அந்த மீட்டிங் நடைபெற்றது. இதுகுறித்து பதிவிட்ட ப்ளூ சட்டை மாறன்.. ரஜினி உடனான அந்த சந்திப்பு ஒரு கசாப்பான அனுபவம் எனவே அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நான் மீற போகிறேன்..
இன்று காலை பதினொரு மணி அளவில் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ காட்சிகள் பகிரப்படும் அதன் விளைவுகள் என்னவாக இருந்தாலும் நான் சந்திக்க தயார். நேர்மையான மற்றும் பாரபட்சமாற்ற நண்பர்களை நான் எப்பொழுதும் நம்புகிறேன் தயவு செய்து இந்த காணொளியை பார்த்து நேரடியாக கருத்து தெரிவிக்கவும் என கூறியுள்ளார்.

