சூப்பர் ஸ்டாருக்கே பட்டை நாமமா.? 150 கோடி போச்சா.? பல நாள் ரகசியத்தை காற்றில் பறக்க விட்ட பிரபலம்.

Rajinikanth : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அது மட்டும் இல்லாமல் படம் வசூல் ரீதியாக நல்ல கலெக்ஷன் ஆனதால் படத்தை தயாரித்த சன் பிக்சர் நிறுவனம் படத்தில் நடித்த ரஜினிகாந்த், மியூசிக் டைரக்டர், இயக்குர் என அனைவருக்கும் காரை பரிசாக கொடுத்தார்.

ஜெயிலர் சக்சஸ் மீட்டில் பேசிய ரஜினிகாந்த் இப்பொழுதுதான் நான் பணக்காரனாக உணர்கிறேன் என கூறியிருந்தார் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது ரஜினியின் இந்த பேச்சுக்கு பின்னால் இருக்கும் பல மர்மங்களை பத்திரிகையாளர் பிஸ்மி தற்பொழுது கூறியுள்ளார்.

அதாவது பிஸ்மி கூறியதாவது ரஜினி மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் ஆக இருந்தும் அவர் அம்பாசிடர் காரை தான் நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்தார் அவருக்கு பின்னால் வந்த பல நடிகர்கள் சொகுசு காரை பயன்படுத்தினாலும் ரஜினி பழைய அம்பாசிடர் காரில் தான் ஷூட்டிங் கிற்க்கு வருவார் அவர் நினைத்தால் கோடி கணக்கில் எவ்வளவு பெரிய காராக இருந்தாலும் வாங்கி பயன்படுத்தலாம் ஆனால் கடைசிவரை எளிமையை கடைப்பிடித்து வந்தார்.

அதன் பிறகு தான் இனோவா காருக்கு மாறினார் கலாநிதி மாறன் கார் கொடுப்பதற்கு முன்பு வரை இன்னோவா கார் இது மட்டும் தான் பயன்படுத்தி வந்தார் இப்படிப்பட்ட கார்களில் பயணித்த வந்த ரஜினி திடீரென விலை உயர்ந்த காரில் போனதால் ஒரு சவுகீரியம் ஏற்பட்டுள்ளது அதனால்தான் சக்சஸ் மீட்டில் இது பணக்காரங்க ஓட்டுகிற கார் என்ற ஃபீல் வருகிறது என கூறி இருந்தார்.

ரஜினி எவ்வளவு பெரிய பணக்காரர் அவர்களிடம் இருக்கும் கோடிகளை என்ன இரண்டு கை பத்தாது அந்த அளவு மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆனால் மனதளவிலும் சரி வெளி உலகத்திற்கும் சரி மிகவும் எளிமையாக தான் இருந்து வருகிறார் ரஜினி நீண்ட காலம் சாதாரண வாழ்க்கையை வாழ வில்லை கோடீஸ்வரராக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

திடீரென நூறு கோடி 150 கோடி பணம் சம்பளம் வாங்கிவிட்டு அந்த பணத்தை எப்படிடா செலவழிப்பது என்று தெரியாமல் லாஸ் வேகாஸ் கிளம்பி போய் அங்கு சூதாடி சம்பாதித்த பணத்தை எல்லாம் தோற்று விட்டார் தோத்த பிறகு அப்பாடா என மனசு ரிலாக்ஸ் ஆகி தான் வருவாராம் இந்த வாழ்க்கையை தான் ரஜினி வாழ்ந்து கொண்டிருக்கிறார் அப்படி இருக்கும் பொழுது கலாநிதி மாறன் கொடுத்த சொகுசு காரில் உட்காரும்போது தான் பணக்காரனாக ஃபீல் பண்ணியதற்கு அர்த்தம் இல்லை என பத்திரிக்கையாளர் பிஸ்மி சூப்பர் ஸ்டார் ரகசியத்தை கூறியுள்ளார்.