பாலா இயக்கிய திரைப்படத்தில் ரஜினிக்கு பிடித்த திரைப்படம் இதுதான்.! அந்த திரைப்படத்திற்காக ரஜினி என்ன செய்தார் தெரியுமா?

இயக்குனர் பாலா தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர், இவர் இயக்கும் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் ஏனென்றால் சமூக சார்ந்து எதார்த்தமாக திரைப்படத்தை இயக்கி இருப்பார். அதேபோல் பாலா திரை படத்தில் நடிப்புக்கு தான் அதிக முக்கியத்துவம் இருக்கும்.

பாலாவின் திரைப்படத்தில் ஒரு நடிகர் நடிக்கிறார் என்றால் அவரிடம் இருக்கும் முழு நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தும் விதமாக தனது திரைப்படத்தில் நடிக்க வைத்து விடுவார் பாலா, அதேபோல் பாலா திரைப்படத்தில் சென்டிமெனட் காட்சிகள் மக்கள் மனதில் பதியும்படி தான் இருக்கும் படி திரைப்படத்தில் காட்டிவிடுவார்.

அந்தவகையில் பாலா இயக்கத்தில் வெளியாகிய பிதாமகன் மற்றும் நந்தா திரைப்படம் சூர்யா நடித்தவை, இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது அதுமட்டுமில்லாமல் சூர்யா திரைப்பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது, அதேபோல் விக்ரமுக்கு பிதாமகன் மற்றும் சேது திரைப்படம் பாலா இயக்கிய திரைப்படம் இந்த இரண்டு திரைப்படங்களும் விக்ரம் திரைப்பயணத்தில் முக்கிய திரைப்படமாக அமைந்தது.

இதுவரை பாலா எட்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார் அதில் சூப்பர்ஸ்டாருக்கு எந்த திரைப்படம் பிடித்தது என்றால் ஆர்யா பூஜா நடித்த நான் கடவுள் திரைப்படம் தான், நான் கடவுள் திரைப்படம் மிகவும் அருமையாக இருந்தது என ரஜினி கூறியுள்ளார் அதுமட்டுமில்லாமல் இந்தத் திரைப்படத்திற்காக ரஜினி மிகப்பெரிய விருந்து வைத்துள்ளார் பாலாவிற்கு.

இதனை பாலாவே ஒரு மேடையில் கூறியுள்ளார், நான் கடவுள் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று பல விருதுகளை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Exit mobile version