சேரில் அமர்ந்து அட்டை பத்திரிக்கையில் தன்னைப் பற்றி எழுதியிருப்பதை சுவாரசியமாக படிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி.! பலரும் பார்த்திராத புகைப்படம்

0

பொதுவாக சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே தொடர்ந்து வயதானாலும் கூட முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருப்பார்கள். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் வயதானாலும் கூட இளம் நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் நடிகர் ரஜினி.

பொதுவாக இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் இந்திய அளவில் மாபெரும் வெற்றியை பெற்று விடும். அதுமட்டுமல்லாமல் இவர் நடிக்கும் எந்த திரைப்படங்களாக இருந்தாலும் அத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருப்பது வழக்கம்.

அந்த வகையில் தற்பொழுது ரஜினி அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா மற்றம் தங்கையாக கீர்த்தி சுரேஷ் இவர்களைத் தொடர்ந்து முறை பெண்களாக குஷ்பு மற்றும் மீனா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இவ்வாறு பிரபல நட்சத்திரங்கள் அனைவரும் இணைந்து நடிப்பதால் இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது.  இந்நிலையில் இத்திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று கூறி உள்ளார்கள்.

இந்நிலையில் ரஜினி எப்பொழுதும் தன்னை பற்றி எழுதும் பத்திரிகைகளை தானே படித்து ரசிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறாராம்.அந்தவகையில் இளம் வயதில் இவரை பற்றி எழுதப்பட்ட புத்தகம் ஒன்றை வைத்து படித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.