வாக்கிங் போன ரஜினிக்கு அட்வைஸ் கொடுத்த ரசிகர்கள்.! எதற்காக தெரியுமா.?

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த்.  உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள இவர் சமீபத்தில் வாக்கிங் நடந்து சென்றுள்ளார் அதனை பார்த்த ரசிகர்கள் இதுதான் உங்க பிட்னஸ் காரணமாக என்று கூறி வருகிறார்கள்.

தற்பொழுது ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் தான் இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது இவர் சென்னை வந்துள்ளார் இப்படிப்பட்ட நிலையில் தற்போது அடுத்த திரைப்படத்திற்கான இயக்குனர்களை தேர்வு செய்வதில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் இந்த வருடத்திற்குள் இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்து விட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளாராம் ஏனென்றால் தற்போது இவருக்கு வயது முதிர்ச்சியின் காரணமாக தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை இந்நிலையில் இவர் ஒரு திரைப்படத்தல் நடிப்பதற்காக 100 கோடி சம்பளம் பெற்று வருகிறார்.

இந்நிலையில் தற்பொழுது தமிழ்நாட்டில் வேகமாக கொரோனா பரவி வருவதால் 10:00 மணி வரையும் அத்தியாவசியமான பொருட்களை வாங்கி கொள்ளலாம் அதன் பிறகு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது எனவே அனைவரும் வீட்டிலேயே இருந்து வருகிறோம்.

அந்த வகையில் தற்பொழுது வீட்டிலேயே இருந்து வரும் ரஜினிகாந்த் காலையில் எழுந்தவுடன் ஹாய்யாக வாக்கிங் சென்றுள்ளார். டி ஷர்ட்டில் லைவ், லவ், ரன் என எழுதப்பட்டுள்ளது.  எனவே இவர் வாக்கிங் செல்லும் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் தலைவா இதுதான் உங்கள் பிட்னஸ்சுக்கு காரணமாக என கூறி வருகிறார்கள்.

rajini 6
rajini 6
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment