ரஜினியுடன் 27 வருடமாக நடிக்காதது ஏன்.! தேவயானி சொல்லும் காரணம் இதுதான்.

0

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினி. தமிழ் சினிமாவில் முத்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் வயதானாலும் கூட தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து சினிமாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இருந்தாலும் இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களை பார்த்து ரசிகர்கள் முன்பு இருந்த சுறுசுறுப்பு இல்லை என்று கூறி வருகிறார்கள்.

இருந்தாலும் ரஜினியுடன் இளம் நடிகைகள் முதல் முன்னணி நடிகர்கள் வரை அனைவரும் ஜோடியாக நடிப்பதற்கு ஆசைப்பட்டு வருவது வழக்கம் அந்த வகையில் 90 காலகட்டத்தின் முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயானி சமய பேட்டி ஒன்றில் ஏன் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்க வில்லை என்பதை பற்றி கூறியுள்ளார். அதோடு ரஜினியுடன் நடிப்பதற்கு மிகவும் ஆசையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றித் திரைப்படங்களை தந்து கொடிகட்டி பறந்து வருகிறார் ரஜினி. ஒரு சில நடிகைகள் குழந்தை நட்சத்திரமாக ரஜினி படத்தில் நடித்து இருப்பார்கள் அவர்களை ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர்கள் உள்ளார்கள். அதோடு ரஜினிகாந்திற்கு ஜோடியாகவும் குழந்தை நட்சத்திரமாகவும் அம்மாவாகவும் ஒரே நடிகை நடித்தவர்களும் உள்ளார்கள்.

ஆனால் 90களில் முன்னணி நடிகையாக வலம்வந்த தேவயானி இதுவரையிலும் ரஜினி திரைப்படத்தில் நடித்தது இல்லை இவர் தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வந்தார். அதோடு தனது சிறந்த நடிப்பினால் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த இவர் ஏன் இதுவரையிலும் ரஜினிகாந்த் திரைப்படத்தின் நடிக்கவில்லை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இதுகுறித்து 27 வருடங்களாக ரஜினிகாந்த் திரைப்படங்களில் நடிக்க வில்லை என்பதை பற்றி சமீப பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் தகுந்த கதாபாத்திரத்திம் தனக்கு கிடைக்கவில்லை என்றும் அவரின் திரைப்படத்திற்கு நான் தேவை இல்லை போல என்றும் வருத்தமாக கூறியுள்ளார்.

தற்பொழுது தேவயானி சின்னத்திரையிலும் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வரும் நிலையில் அந்தவைகையில் தற்பொழுது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் நடித்து வருகிறார்.