மீண்டும் ஒரு முறை நேருக்கு நேராக மோத இருக்கும் ரஜினி – கமல்..! யாரு மாஸ்ன்னு இதுல தெரிஞ்சிடும்….

தமிழ் சினிமா உலகில் எப்பொழுதும் போட்டிக்கு மட்டும் பஞ்சமே இருக்காது எம்ஜிஆர் சிவாஜிக்குப் பிறகு ரஜினி கமல் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி தோல்வி படங்களை கொடுத்து ஓடினர் குறிப்பாக கமல்.

நாம் எதிர்பார்க்காத வித்தியாசமான படங்களை தேர்வு செய்து அதில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்து இழுப்பது அவரை அடித்துக் கொள்ள இன்றுவரையிலும் ஆளே கிடையாது மறுபக்கம் ரஜினியோ கமர்ஷியல் ஸ்டைலை காண்பித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.

தொடர்ந்து இவர்கள் இருவரும் இப்பொழுதும் கூட படங்களில் நடித்து வருகின்றனர் ரஜினி கடைசியாக அண்ணாத்த படத்தில் நடித்தார் கமல் நீண்ட வருடங்களுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்து விக்ரம் திரைப்படத்தில் நடித்தார் இந்த படம் தற்போது நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

சினிமா உலகில் இருவரும் படங்களின் மூலம் மோதிக் கொண்டாலும், வாழ்க்கையில் இவர்கள் இருவரும் இன்றுவரை சிறந்த நண்பர்களாக இருந்து வருகின்றனர்.
இதனை பல மேடைகளில் ரஜினியும் கூறியுள்ளார் கமலும் சொல்லி உள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் இப்படி இருக்கின்ற நிலையில் 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு முறை நேருக்கு நேர் மோத இருக்கின்றனர் விக்ரம்.

படத்தை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசன் தேவர்மகன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 169 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது. இரண்டு டாப் ஹீரோக்கள் ஒரே சமயத்தில் மோதிக்கொள்வது அவர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்க இருக்கிறதாம்.

Leave a Comment