கொடூரமான 5 பேய் படங்களில் நடித்த ரஜினி, கமல் – இப்ப கூட இந்த படத்த பாத்த பயந்து நடுகுவிங்க..

திரை உலகில் இப்பொழுது வேண்டுமானால் பலர் பேய் படங்கள் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன ஆனால் பல வருடங்களுக்கு முன்பாகவே கொடூரமான பேய் படங்களில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார் உள்ளனர் ரஜினி, கமல்.

குறிப்பாக ரஜினி பெரிதும் கமர்ஷியல் படங்களில் தான் நடிப்பது வழக்கம் ஆனால் இவர் அவ்வப்போது பேய் படங்களில் நடித்து உள்ளது அந்த பேய் படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களுக்கு நல்லதொரு பயத்தை காட்டி உள்ளது. அந்த படங்கள் என்னென்ன என்பது குறித்து தற்போது விலாவாரியாக பார்ப்போம்.

1. சந்திரமுகி :

ரஜினியின் பேய் படங்களில் மிக முக்கியமான படம் சந்திரமுகி. இந்த படத்தை தனக்கே உரிய பாணியில் பி. வாசு எடுத்திருப்பார் படம் முழுக்க முழுக்க ஆக்சன், சென்டிமெண்ட், திரில்லர் என அனைத்தும் வந்து போகும். இதில் ஒவ்வொரு சீன்னும் ரசிக்கும் படியும் இருந்ததால் இந்த படம் அப்பொழுது வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது இந்த படத்தை சிவாஜி production வேற லெவலில் தயாரித்திருந்தது இந்த படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து பிரபு, ஜோதிகா, நயன்தாரா, விஜயகுமார் போன்ற பல டாப் நடிகர்கள் நடித்து அசத்தியிருப்பார்.

2. ஆயிரம் ஜென்மங்கள் :

ரஜினிகாந்த் நடிப்பில் 1978 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஆயிரம் ஜென்மங்கள். இந்த படத்தில் ரஜினி, விஜயகுமார், பத்மபிரியா லதா உள்பட பலர் நடித்து இருந்தனர். இந்த திரைப்படத்தில் ரஜினியின் தங்கை உடலில் இருக்கும் பேயை விரட்டுவதற்கு போராடுவார் அதே போன்று இந்த படத்திலும் எல்லா பாடல்களும் ரசிகர்களை கவர்ந்து இழுத்தது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

3. கல்யாணராமன் :

கமல் நடிப்பில் 1979ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் கல்யாணராமன். இந்த திரைப்படத்தை ரங்கராஜன் தனக்கே உரிய பாணியில் எடுப்பார் இந்த படத்தில் ஸ்ரீதேவி, விகே ராமசாமி மற்றும் பலர் டாப் நடிகர், நடிகைகள் நடித்து இருப்பார்கள். இந்த படத்தில் இரண்டு கமல்கள் அதில் ஒரு அப்பாவி எதிரி அந்த கமலை கொன்று விடுவார்கள் ஆவியாக மாறி வந்து பழிவாங்கும் கதையை காமெடி   காட்டியிருப்பார் இது அப்பொழுது வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.

4. ஜப்பானில் கல்யாண ராமன் :

அதனுடைய அடுத்த பாகம் தான் ஜப்பானில் கல்யாண ராமன். இந்த திரைப்படமும் கல்யாணராமன் படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் இந்த படம் முழுக்க முழுக்க அதே போன்று ஒரு படமாக எடுக்கப்பட்டது இந்த படமும் நல்லதொரு வசூல் வேட்டையை நடத்தியது என்பது.

5. வயநதன் தம்பன் :

கமலஹாசன் நடிப்பில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் தான் வயநதன் தம்பன். இந்தப்படம் 1878 ஆம் ஆண்டு வெளியாகியது இந்த திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது இது ஒரு முழுக்க முழுக்க பேய் சம்பந்தப்பட்ட படமாக உருவாகியிருந்தது.

Leave a Comment

Exit mobile version