ரஜினி, கமல், அஜித், விஜய் எல்லாம் இப்பதான்… தமிழ் சினிமாவிலேயே முதன்முறையாக கோடிகளில் சம்பளம் வாங்கிய முதல் தமிழ் நடிகர் இவர்தான்.!

0
rajini kamal
rajini kamal

சினிமாவைப் பொறுத்தவரை நடிகர்கள் கோடிகளில் சம்பளம் வாங்குவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் தற்பொழுது உள்ள காலகட்டத்தில் இளம் நடிகர்கள் கூட கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்கள் அதிலும் முன்னணி நடிகர்களாக நடித்து வரும் நடிகர்கள் 60 கோடி 100 கோடி என சம்பளம் வாங்கி வருகிறார்கள். அப்படி இன்று கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு முன்னோடியாக இருந்தவர் பிரபல நடிகர் தான்.

இவர்தான் தமிழ் சினிமாவிலேயே முதல்முறையாக கோடிகளில் சம்பளம் வாங்கிய நடிகரும் கூட. ரஜினி, கமல், அஜித், விஜய் கூட கோடிகளில் சம்பளம் வாங்கியது கிடையாது அப்பொழுது காலகட்டத்தில் ஆனால் ஒரே ஒரு நடிகர் மட்டும் கோடிகளில் சம்பளம் வாங்கினார் அவர் வேறு யாரும் கிடையாது நடிகர் ராஜ்கிரன் தான். இவர் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் தயாரிப்பாளராக தான் களம் இறங்கினார்.

என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக ஹீரோவாக அவதாரம் எடுத்தார். தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் அவருக்கு பல திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது அதனை தொடர்ந்து அரண்மனைக்கிளி எல்லாமே என் ராசாவே தான் ஆகிய திரைப்படங்களை இயக்கியும் நடித்திருந்தார்.

ராஜ்கிரன் திரைப்படம் என்று குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக தான் இருக்கும் அப்பொழுது உள்ள ரசிகர்களை வெகுவாக கொண்டாட வைத்தது குடும்ப செண்டிமெண்ட் திரைப்படம். அதனால் இவர் அறிமுகமான குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை அடைந்தார். சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்த ரஜினி, கமல் கூட 80 லட்சம் 70 லட்சம் தான் சம்பளம் வாங்கி வந்தார்கள் ஆனால் ராஜ்கிரண் மாணிக்கம் என்ற திரைப்படத்திற்காக ஒரு கோடி ரூபாய் சம்பளம்  வாங்கினாராம்.

இந்த திரைப்படத்தின் மூலம் ஒரு கோடி சம்பளம் வாங்கிய முதல் தமிழ் ஹீரோ என்ற அந்தஸ்தையும் ராஜ்கிரன் பெற்றார். இந்த திரைப்படத்திற்குப் பிறகு ரஜினி, கமல், விஜயகாந்த் என பல நடிகர்கள் கோடிகளில் சம்பளம் வாங்க தொடங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.