jailer : பாலிவுட்டில் காட்டுனது பத்தாது என ரஜினியின் ஜெய்லரிலும் டூ பீஸ் போடும் தமன்னா.! பட குழு வெளியிட்ட போஸ்டர்.!

jailer
jailer

jailer : தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்று வரை சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் பல வெற்றி திரைப்படங்களையும் தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். பல நடிகர் மற்றும் நடிகைகள் எப்படியாவது ஒரு திரைப்படத்தில் ஆவது சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வேண்டும் என எண்ணிய துண்டு.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி கடைசியாக அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், இந்த திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை இதனைத் தொடர்ந்து தற்பொழுது தளபதி விஜயை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிரைலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படம் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது அதுமட்டுமில்லாமல் ஜெயிலர்  திரைப்படத்தில் அனிருத் தன் இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்த திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. ரஜினி திரைப்படம் திரையரங்கிற்கு வந்தாலே திரையரங்கமே திருவிழா போல் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

ஆனால் இந்த முறை இன்னும் வேற லெவலில் கொண்டாட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஜெயிலர் திரைப்படத்திலிருந்து ஏதாவது ஒரு அப்டேட் பட குழு வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது. ஏனென்றால் படத்தின் சுவாரசியத்தை இன்னும் அதிகரிக்க செய்து வருகிறது அப்படி இருக்கும் வகையில் தற்பொழுது படத்தை தயாரிக்கும் சன் பிக்சர் நிறுவனம் காவலா என்று ஆரம்பிக்கும் முதல் பாடலின் வரியை தற்பொழுது வெளியிட்டுள்ளார்கள்.

இந்த பாடலுக்கு நடிகை தமன்னா தான் குத்தாட்டம் போட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இன்று மாலை ஆறு மணி அளவில் இந்த பாடல் வெளியாகும் என போஸ்டர் மூலம் பட குழு தெரிவித்துள்ளது மேலும் அந்த போஸ்டரில் நடிகை தமன்னா டூ பீஸ் ஆடை அணிந்து ஆட்டம் போட இருப்பதாக வெளியாகி உள்ளது.

ஏற்கனவே தமன்னா வெப் தொடரில் கவர்ச்சியில் எல்லை மீறினார் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில் தற்பொழுது ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்திலும் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் நடனமாடி இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.