வெளிநாட்டில் கூட தனது ரசிகர்களை விட்டு பிரிய முடியாமல் தவிக்கும் ரஜினி.! இணையத்தில் வைரலாகும் புதிய புகைப்படங்கள்.!

0

வெள்ளித்திரையில் நிறைய பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது  திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து வருகிறது அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் வெளியான தர்பார் மற்றும் பேட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துவிட்டது என்று தான் கூற வேண்டும்.

இதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அடுத்த திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் கைகோர்த்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தை பற்றி தான் தற்போது இவரது ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்புகிறார்கள்.

இத்திரைப்படத்தைப் பற்றி புதிதாக அப்டேட் வெளிவருமா என பலரும் சமூக வலைதள பக்கங்களில் கமெண்ட் பதிவு செய்து வருவது மட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் ரஜினியின் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது என கேட்கிறார்கள்.

rajini9
rajini9

அண்மையில் ரஜினி தனது உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான் இவர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த புகைப்படங்கள் கூட சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலானது ரஜினிக்கு பொதுவாக தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலக அளவில் ரசிகர்கள் கூட்டம் அதிகம்.

rajini67
rajini67

இந்நிலையில் அவர் ஒரு முறை USA, west virginia என்ற நாட்டிற்கு சென்றுள்ளார் அங்கு அவரை பார்ப்பதற்கு அவரது ரசிகர்கள் ஒரு சிலர் சிறப்பு அனுமதியுடன் சந்தித்துள்ளார்கள் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ரஜினியின் புகழ் உலகம் முழுவதும் பரவி விட்டது என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.