சினிமா உலகில் “நான் கெத்தாக” இருக்க காரணமே ரஜினி தான்.! பல வருட ரகசியத்தை உடைத்த சுந்தர் சி.

0
rajini
rajini

இயக்குனர் சுந்தர் சி முதலில் உன்னை தேடி என்ற படத்தை இயக்கி அறிமுகமானார் அதன் பின் இவர் எடுத்த திரைப்படங்கள் அனைத்துமே மக்களுக்கு பிடித்துப்போன திரைப்படங்கள் தான் இவர் எடுக்கும் பெரும்பாலான படங்கள் காமெடி கலந்த திரைப்படங்களாகத்தான் இருக்கும் ஏன் பேய் படங்களில் கூட காமெடி கலப்பதை இவர் வழக்கமாக வைத்துள்ளார்.

இப்பொழுது கூட ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய் போன்ற நடிகர்களை வைத்து காபி வித் காதல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் படம் வெளிவர ரெடியாக இருக்கிறது அதோடு மட்டுமல்லாமல் பல்வேறு புதிய படங்களில் கமிட் ஆகி ஹீரோவாகவும் நடித்து வருகிறார். சினிமா உலகில் வெற்றி நடை கண்டு வரும் சுந்தர் சி சற்று ஆணவத்தோடு தான் இருக்கிறார் என பலரும் கூறி வருகின்றனர்.

அந்த ஆணவத்திற்கும் ஒரு காரணம் இருக்கிறது என அண்மையில் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார் இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி. அது குறித்து விலாவாரியாக பார்ப்போம் சுந்தர் சியும் குஷ்புவும் ஒருமுறை ஹோட்டலில் சாப்பிடும் பொழுது ரஜினி தனது குடும்பத்துடன் அதே ஹோட்டலுக்கு வந்துள்ளார். அப்பொழுது ரஜினி உடன் குஷ்பூ நிறைய படங்களில் நடித்திருந்ததால் அவருடன் ஒன்றாக உட்கார்ந்தது சாப்பிட்டு உள்ளனர்.

அப்பொழுது சுந்தர்சியை பார்த்த ரஜினி என்ன படம் இயக்குகிறீர்கள் என கேட்டுள்ளனர் அப்பொழுது உள்ளத்தை அள்ளித்தா என படத்தின் பெயரை சொல்லி உள்ளார். அது ரஜினிக்கு சரியாக உச்சரிப்பு வரவில்லை கடைசியாக விட்டுவிட்டார் இவருடைய முதல் சந்திப்பு இப்படித்தான் ஆரம்பித்தது இதனைத் தொடர்ந்து அடுத்த வருடமே ரஜினி சுந்தர் சி யை அழைத்து இப்பொழுது உங்களிடம் கதை இருக்கிறதா என்றெல்லாம் ரஜினி கேட்கவில்லையாம்.

மாறாக நான் அடுத்து ஒரு படம் நடிக்கப் போகிறேன் நீங்கள் இயக்குகிறீர்களா என கேட்டுள்ளார் அதற்கு பிறகு இவர்கள் இருவரும் கைகோர்த்து அருணாச்சலம் என்ற படத்தில் பணியாற்றினார் அந்த படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதிலிருந்து சுந்தர் சி எந்த நடிகர் இடமும் கதை இருக்கிறது படம் பண்ணுகிறீர்கள் என கேட்க மாட்டாராம் ரஜினி எப்படி உங்களிடம் கதை இருக்கிறதோ சான்ஸ் தருகிறேன் என்று கூறாமல் என் படத்தை நீங்கள் இயக்குங்கள் என கேட்டாரோ அதிலிருந்து நானும் மற்ற நடிகர்களிடம் என் படத்தில் நடிக்கிறீங்களா என்று தான் கேட்பேன் ஒரு கதை இருக்கிறது அதில் நீங்கள் நடிக்கிறீர்களா என்று எப்பொழுதுமே கேட்க மாட்டேன் சுந்தர் சி அந்த ஆவணத்திற்கான பதிலை கூறினார்.