ரஜினி, கமலை தொடர்ந்து பேய் பட ஹீரோவை வைத்து படம் பண்ண போகும் கே. எஸ். ரவிக்குமார்.! யார் தெரியுமா.?

0
rajini-
rajini-

கேஎஸ் ரவிக்குமார் தமிழ் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி பின் நடிகராக விஸ்வரூபம் எடுத்தார். இப்பொழுது சிறப்பான படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் ரசிகர்கள் ஆசைப்படுவது என்னவோ கேஎஸ் ரவிக்குமார் படங்களை இயக்க வேண்டும் என்பது தான்.

ஏனென்றால் இவர் இதுவரை ரஜினி கமல் அஜித் போன்ற ஹீரோக்களை வைத்து சூப்பரான படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து இழுத்து உள்ளார். அதிலும் குறிப்பாக ரஜினியுடன் கே. எஸ். ரவிக்குமார் இணைந்த திரைப்படங்கள் அனைத்துமே வெற்றிப் படங்கள்தான் குறிப்பாக முத்து, படையப்பா, லிங்கா போன்ற படங்கள் அடங்கும்.

தற்போது இவர்கள் இருவரும் இணைந்து ஒரு சூப்பரான படத்தை கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் ஏங்கிக் கொண்டுதான் இருக்கின்றனர் ஆனால் அது நடக்குதோ இல்லையோ தற்போது பிரபல நடிகரை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார் அதற்கான பூஜையும் கூட தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா உலகில் பேய் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை மிகப் பெரிய அளவில் உயர்த்திக் கொண்டவர் ராகவாலாரன்ஸ் இவர் முதல் முறையாக கே எஸ் ரவிகுமார் உடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் தம்பியும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரையில் ராகவாலாரன்ஸ் படங்களில் டான்ஸ் ஆடி வந்துகொண்டிருந்த அவரது தம்பி இந்த படத்தில் காமெடி ஆக்சன் போன்ற சீன்களில் நடிக்க உள்ளார் என்பது கூடுதல் தகவல். கே எஸ் ரவிகுமார் ராகவா லாரன்ஸ் அவரது தம்பி ஆகியோர் இணைந்து பூஜையின் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.