சிவாஜிக்கு கொடுத்த வாக்கை பல வருடங்களுக்கு பிறகு நிறைவேற்றிய ரஜினி.! இத்தனை வருஷமா மறக்காமா இருந்ததே பெரிய விஷயம் தான்.! கொண்டாடும் ரசிகர்கள்.

0

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் என்ற அந்தஸ்தை வைத்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினிக்கு வயது அதிகமானாலும் சினிமா எப்படிப்பட்டது என்பதை நன்கு புரிந்து வைத்துக் கொண்டு ஆக்சன் காமெடி மற்றும் காதல் கலந்த படத்தையே பெரிதும் தேர்ந்தெடுத்தவர் நடிப்பதால் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அவருக்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை வருகின்றன.

அதையேதான் தற்போதும் அவர் செய்து வருகிறார். அந்த காரணத்தினால் தான் அவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மற்ற நடிகர்களின் படங்களைவிட வசூலில் அதிகம் அள்ளுகிறது என கூறப்படுகிறது. தற்பொழுது கூட சிறுத்தை சிவாவுடன் இணைந்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

முதலில் படம் தீபாவளிக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதிலிருந்து பின் வாங்கியுள்ளதாக ஒரு சில தகவல்கள் வெளிவருகின்றன. மேலும் படக்குழுவும் எப்பொழுது படத்தை வெளியிடுகிறோம் என்பதை அதிகாரப்பூர்வமாக சொல்லாததால் எப்பொழுது படம் வெளிவரும் என்பதே தெரியாமல் இருந்து வருகிறது. இப்படியிருக்க ரஜினி பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

ரஜினி தன்னை நம்பிய ஒருவருக்கு எப்பொழுதும் உதவி செய்வது வழக்கம் மற்றும் அவர் எதாவது உறுதி கொடுத்தால் அதை நிறைவேற்றக் கூடியவர் அப்படித்தான் இதுவரையிலும் இருந்து வந்திருக்கிறார்.  சிவாஜியை பார்த்து வளர்ந்தவர் மேலும் சிவாஜி படங்கள் என்றால் ரஜினிக்கு ரொம்ப பிடிக்கும் மேலும் ரஜினி மற்றும் சிவாஜி இருவரும் இணைந்து படையப்பா படத்தில் கூட சேர்ந்து நடித்து இருப்பார்கள். மேலும் சிவாஜியின் தயாரிப்பு நிறுவனத்தில் பல தடவை அவர் படம் நடித்து இருக்கிறார்.

மேலும் நடிகர் திலகம் சிவாஜியுடன் உங்களது தயாரிப்பு நிறுவனத்தில் நான் இன்னும் ஒரு படம் பண்ணுவேன் என அப்பொழுது வாக்குறுதி கொடுத்திருந்தார். அதை பல வருடங்கள் கழித்து மன்னவன் திரைப்படத்தின் வெற்றியின் பொழுது நடிகர் ரஜினி இதைக் குறிப்பிட்டார் நான் சிவாஜி அவர்களின் தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு படம் பண்ணுவேன் என அப்பொழுது உறுதிப்படுத்தினார்.

அவர் சொன்னது போலவே தனது சந்திரமுகி திரைப்படத்தை நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுத்து அழகு பார்த்தார். இந்த செய்தி தற்போது இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருவதோடு ரஜினி ரசிகர்கள் ரஜினி எப்பொழுதும் சொல்லுவதை செய்வது வழக்கம் அதையே தான் தற்போது வரை செய்து வருகிறார் என கூறி கொண்டாடி வருகின்றனர்.