ரஜினியின் தர்பார் படத்தில் நடித்த நிவேதா தாமஸ்ஸா இது.! என்னம்மா போஸ் கொடுத்துள்ளார்.

நடிகை நிவேதா தாமஸ் குழந்தை நட்சத்திரமாக பல திரைப் படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார், இவர் 2003 ஆம் ஆண்டு உத்ரா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார், அதன்பின் 2008ஆம் ஆண்டு வேறுதே ஒரு பார்யா என்ற திரைப்படத்தில் ஜெயராம் மற்றும் கோபிகாவின் மகளாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக கேரள மாநில திரைப்பட விருது கிடைத்தது, இந்த நிலையில் 2008 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகிய குருவி என்ற திரைப்படத்தில் முதன்முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார், அந்த திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்திருந்தார்.

பின்பு 2009 ஆம் ஆண்டு ராஜாதி ராஜா திரைப்படத்திலும் 2011ம் ஆண்டு போராளி என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். பின்பு நவீன சரஸ்வதி சபதம், விஜய்யின் ஜில்லா ஆகிய திரைப்படத்தில் நடித்திருந்தார், கடைசியாக இவர் ரஜினியின் தர்பார் திரைப்படத்தில் ரஜினியின் மகளாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த நிவேதா தாமஸ் தற்பொழுது தன்னுடைய சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் நிவேதா தாமஸ் மிகவும் அழகாக இருக்கிறார் மேலும் ரசிகர்களின் கண்களை ஈர்க்கும் வகையில் இருக்கிறார் என பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment