ரஜினியே என்னைத் தேடி வந்தாலும் அவரை வச்சி படம் பண்ண மாட்டேன்.! உச்சகட்ட கோபத்தில் ஷங்கர்

0
rajini
rajini

பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ள ஷங்கர். தற்பொழுது கமலை வைத்து இந்தியன் 2 படத்தை எடுக்க மறுபக்கம் தெலுங்கில் நடிகர் ராம்சரனை வைத்து  RC 15 என்னும் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து ஷங்கர் யாருடன் கை கோர்ப்பார் என்பது  தெரியவில்லை..

ஆனால் பலரும் ரஜினியுடன் தான் அவர் கூட்டணி அமைப்பார் என சொல்லுகின்றனர். ரஜினியை வைத்து ஷங்கர் இதுவரை எந்திரன், 2.0, சிவாஜி ஆகிய மூன்று படங்களும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது இப்பொழுது ஷங்கரும், ரஜினியும் நல்ல நட்பு வட்டாரத்தில் இருப்பதால் அடுத்து இணைய வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினி – ஷங்கர் பற்றி ஒரு தகவல் வைரலாகி வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் ரஜினி மீது ஷங்கர் உச்சகட்ட கோபத்தில் இருந்து உள்ளார். இயக்குனர் ஷங்கர் முதல்வன் கதையை உருவாக்கிக் கொண்டு ரஜினியிடம் சொல்ல போய் உள்ளார். ஆனால் அந்த படத்தில் நடிக்க முடியாது என ரஜினி தெரிவித்து விட்டாராம் அடுத்ததாக சிவாஜி படத்தின் கதையை உருவாக்கி அவரிடம் சொல்லப் போனார்.

ஆனால் ஆரம்பத்தில் அதில் ரஜினி நடிக்கவில்லையாம் இதனால் உச்சகட்ட கோபம் அடைந்த ஷங்கர் இனி ரஜினியே என் வீட்டிற்கு வந்து கேட்டால் கூட அவரை வைத்து படம் பண்ண மாட்டேன் என வைரமுத்துவிடம் கூறிவிட்டாராம்.. வைரமுத்து இந்த விஷயத்தை ரஜினியிடம் கூறிவிட்டாராம் சில மாதங்கள் கழித்து ஏவிஎம் சரவணன் ரஜினி பேசிக் கொண்டிருந்தாராம் அப்பொழுது ஒரு பெரிய படம் ஒன்று செய்வோம் என ரஜினி கூறினாராம் அதற்கு ஏவிஎம் சரவணன் அது சாத்தியம் என்றால் இயக்குனர் ஷங்கரால் தான் முடியும் எனக் கூறியுள்ளார்.

இதற்கு ரஜினி அதுக்கு வாய்ப்பே இல்லை ஏனென்றால் என் மீது அவர் ரொம்ப கோபத்தில் இருக்கிறார் என கூறினாராம். ஏவிஎம் சரவணன் நான் வேண்டுமானால் பேசி பார்க்கிறேன் என கூற ரஜினி  எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை பேசி பாருங்கள் என்று சொல்ல.. ஒருவழியாக சமாதானமமாகி ரஜினியும், ஷங்கரும் கூட்டணி அமைத்து சிவாஜி படத்தில் இணைந்தனர். அந்த படம் வெளிவந்த மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.