தமிழ் சினிமா உலகில் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் கமர்சியல் படங்களில் நடித்து வெற்றி மேல் வெற்றியை குவித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அண்மையில் கூட நடிகர் ரஜினி முன்னணி இயக்குனர் சிறுத்தை சிவா உடன் கூட்டணி அமைத்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் இப்படம் முழுக்க முழுக்க..
ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்த திரைப்படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது இந்த படம் 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டையை செய்து புதிய சாதனை படைத்தது அதனைத் தொடர்ந்து ரஜினி பல்வேறு இயக்குனருடன் கதை கேட்டு வந்த நிலையில் ஒரு வழியாக தனது 169 வது திரைப்படத்திற்கான இயக்குனரை தேர்வு செய்துள்ளாராம்.
சிவகார்த்திகேயன், விஜய் ஆகியோரை வைத்து படங்களை இயக்கிய நெல்சன் உடன் ரஜினி கைகோர்க்க உள்ளார். ரஜினி தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் மற்ற மொழிகளிலும் இவரது படங்கள் சூப்பர் ஹிட் அடிக்கும். ரஜினியை போலவே தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக இருக்கும் நடிகர்கள் கூட..
தமிழ் தாண்டி மற்ற மொழிகளில் படத்தை ரிலீஸ் செய்து நல்லாவே காசு பார்த்து வருகின்றனர்.மேலும் அதன் மூலம் அங்கேயும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொள்கின்றனர். ஆனால் பல வருடங்களுக்கு முன்பு அந்த சாதனையை செய்து அசத்தியவர் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் பெரும்பாலான திரைப்படங்கள் தமிழ் தாண்டி மற்ற மொழிகளிலும் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து.
பார்த்திருக்கிறோம் அந்த வகையில் 1999 ஆம் ஆண்டு வெளியான படையப்பா திரைப்படம் தெலுங்கில் மட்டுமே அப்போதே 14 கோடி வசூல் செய்து உள்ளது மேலும் அங்கு 32 திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் படையப்பா திரைப்படம் ஓடி புதிய சாதனை படைத்தாம்.