ரஜினியின் பாட்ஷா திரைப்படத்தில் நடிகர் கமல்.! பலரம் கண்டிடாத புகைப்படம்.!

0

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக அன்றிலிருந்து இன்றுவரை வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் ஒரு இந்திய நடிகர், இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும், பணியாற்றினார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நான்கு தமிழக மாநில திரைப்பட சிறந்த நடிகருக்கான விருது மற்றும் பிலிம்பேர் சிறந்த தமிழ் நடிகருக்கான விருது என பல விருதுகளை தட்டிச் சென்றுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் பத்மபூஷன் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய விருதுகளையும் வென்றுள்ளார். மேலும் விஜய் விருதுகளில் இந்திய சினிமாவில் சிறந்து விளங்கிய செவாலியர் சிவாஜி கணேசன் விருதை தட்டிச் சென்றவர். அதுமட்டுமில்லாமல் நாற்பத்தி ஐந்தாவது சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினி அவர்களுக்கு ஆண்டின் இந்திய திரைப்பட ஆளுமைக்கான நூற்றாண்டு விழா வழங்கப்பட்டது.

இப்படி இந்திய சினிமாவில் ஜொலித்து வரும் ரஜினி தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என முக்கிய பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். கடந்த 40 வருடங்களாக சினிமாவை தனது கைக்குள் வைத்திருக்கும் ஒரே நடிகர் இவர்தான்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் இருவரும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக விளங்கி வருகிறார்கள் அதேபோல் இவர்கள் இருவரும் பல திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடித்து இருப்பார்கள்.மேலும் இவர்கள் திரைப்படங்கள் வெளியாகி மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.

rajini-basha
rajini-basha

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தில் கமலஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் ரஜினி நடிப்பில் 1995-ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் பாட்ஷா இந்த திரைப்படம் சினிமாவில் புதிய மைல்கல்லை தொட்டது என்று கூட கூறலாம்.

அந்த அளவு பாட்ஷா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் பாட்ஷா திரைப்படத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் கமல் ஹாசன் மற்றும் ரஜினி ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளார்கள் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்கள்.

rajini-basha
rajini-basha