ரஜினியுடன் டூயட் ஆட.? அதிரடியாக உடல் எடையைக் குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய மீனா.! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் சிறுவயதிலிருந்தே குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் மீனா, இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் 1801ஆம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளியாகி ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார், அதன்பின் ரஜினி, கமல், சரத்குமார், பிரபு எனப் பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார்.

குடும்பப்பாங்கான கதாபாத்திரத்திலும் சரி மாடர்ன் உடை அணிந்த கதாபாத்திரம் என்றாலும் சரி மிகவும் கச்சிதமாக பொருந்தினார், அதனால் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 90களில் கனவு கன்னியாக வலம் வந்த மீனா ஷாஜகன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார், அந்தப் பாடலும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி ஹிட் அடித்தது.

பின்பு திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்காமல் விலகியே இருந்தார். சினிமாவில் இருந்து, அதனால் கொஞ்சம் உடல் பெருத்து குண்டாக மாறினார், அதன்பிறகு சில விளம்பரப் படங்களிலும் நடித்து வந்தார், இவர் தமிழ் சினிமாவில் மீண்டும் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தில் இணைந்துள்ளார்.

meena
meena

24 வருடங்களுக்குப் பிறகு ரஜினியின் திரை படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஏனென்றால் இதற்கு முன், முத்து, வீரா,எஜமான் ஆகிய திரைப்படங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார் மீனா.

ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று இதுவரை படக்குழு அறிவிக்கவில்லை. இந்த நிலையில் மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், அந்த புகைப்படம் தாறுமாறாக வைரலாகி வருகிறது ஏனென்றால் அந்த புகைப்படத்தில் மிகவும் உடல் எடையை குறைத்து செம்ம ஸ்லிம் லுக்கில் மாறியுள்ளார்.

meena
meena

இணையதளத்தில் வைரலாக மீனாவின் அசத்தலான போட்டோஸ் இதோ.

meena
meena

Leave a Comment