ரஜினி நடிப்பில் வெளியான “அண்ணாமலை” திரைப்படம் – அள்ளிய முழு வசூல் எவ்வளவு தெரியுமா.?

rajini
rajini

80 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி வெற்றி மேல் வெற்றியை சம்பாதித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அந்த காரணத்தினால் no. 1 இடத்தை தக்கவைத்து கொண்டு வருகிறார். ரஜினியின் பெரும்பாலான படங்கள் வசூல் வேட்டை கண்டு பார்த்து உள்ளோம்.

அந்த  வகையில் 1992 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் அண்ணாமலை. இந்த படத்தில் முழுக்க முழுக்க ஏழையாக இருந்து பின் ரஜினி தனது முயற்சியின் மூலம் பணக்காரனாக மாறியே தனது நண்பனின் பணக்கார திமிரை எப்படி  அடக்குகிறார்.

என்பதே கதை களமாக எடுக்கப்பட்டு இருந்தது இந்த படத்தில் குஷ்பு, மனோரமா, சரத்பாபு, ராதாரவி, ஜனகராஜ், நிழல்கள் ரவி உட்பட பல நடிகர், நடிகைகள் நடித்து இருந்தனர்.இந்த படம் விறுவிறுப்பு, ஆக்ஷனுக்கு பஞ்சம் இல்லாமல் இருப்பதால் படம் போகும் நேரமே தெரியாது அந்த அளவிற்கு விறுவிறுப்பாக  இருந்தது.

மேலும் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு இந்த திரைப்படமும் நன்றாக பிடித்து போனதால் விமர்சன ரீதியாகவும் வசூலிலும் அடித்து நொறுக்கியது. இப்படி இருக்கின்ற நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த அண்ணாமலை திரைப்படம் 1992 ஆம் ஆண்டு எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதன்படி பார்க்கையில் அப்போதைய நிலவரப்படி சுமார் 23 கோடி வரை வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அந்த காலகட்டத்தில் மிகப் பெரிய ஒரு சாதனை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இப்பொழுது இருக்கும் மார்க்கெட்டை விட 90 காலகட்டங்களில் அவரது மார்க்கெட்ட வேற.. அதற்கு உதாரணம் இந்த படத்தை கூட சொல்லலாம்..