தீப்பொறி பறக்க பறக்க வெளியானது ரஜினியின் அண்ணாத்த ட்ரைலர்.!

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அன்றிலிருந்து இன்றுவரை சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் இவர் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சமீபத்தில் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது அதுமட்டுமில்லாமல் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் படத்தின் பிரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளது.

அண்ணாத்த திரைப்படத்தின் டீசரை தொடர்ந்து பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வந்தது மேலும் இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா குஷ்பூ மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். மேலும் டீசரில் ரஜினியின் கதாபாத்திரத்தை  தவிர வேறு எந்தவொரு கதாபாத்திரத்தையும் வெளியே விடாமல் அமைதி காத்து வந்தார்கள் படக்குழு.

அதனால் ரசிகர்கள் பலரும் மற்றவர்களுக்கு மிகப்பெரிய கதாபாத்திரம் இல்லை என ரசிகர்கள் கூறி வந்த நிலையில் படக்குழுவினர் திடீரென அந்த திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் டிரைலர் சமூகவளைதலத்தில் வைரளாகி வருகிறது அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அதிக பார்வையாளர்களை கடந்து வருகிறது.

இதோ அண்ணாத்த ட்ரைலர்