தமிழ் சினிமாவில் தற்போது மூத்த நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது வரையிலும் இவர் பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் இந்திய அளவில் மாபெரும் வெற்றியை பெற்று விடும். இந்நிலையில் தற்போது இவருக்கு வயது முதிர்ச்சியின் காரணமாக இந்த வருடத்திற்குள் இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்து விட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார். அதோடு தற்போது ரஜினி நடிக்கும் ஒவ்வொரு பாடத்திற்கும் 100 கோடி சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்பொழுது ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா, தங்கையாக கீர்த்தி சுரேஷ்,முறை பெண்களாக குஷ்பு மற்றும் மீனா போன்ற பல நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்து வருகிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் சூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் பலருக்கு ஷூட்டிங்கின் போது கொரோனா உறுதியானதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சில மாதங்கள் கழித்து மீண்டும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வந்தது.அந்தவகையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற தற்பொழுது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நடைபெற்று முடிந்துவிட்டது.
டப்பிங் வேலைகள் மட்டும் இருந்து வருகிறது எனவே ரஜினிகாந்த் தற்பொழுது சென்னையில் உள்ள அவரின் வீட்டிற்கு வந்துள்ளார்.வந்தவுடன் ரஜினியின் மனைவி ஆரத்தி எடுத்து ரஜினிகாந்தை அழைத்துள்ளார். தற்பொழுது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
#Rajinikanth #Annaatthe is back 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 pic.twitter.com/uwSlS7t3l5
— Nivetha petuaraju 😍 (@Nivethapethur) May 12, 2021
ரஜினிகாந்த் இன்னும் சில நாட்களில் அமெரிக்கா சென்று தனது உடல் நலத்தை கவனிக்க உள்ளார். அதோடு அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் கூறியுள்ளார்கள்.